FIFA 2022 : மெஸ்ஸியின் கண்கட்டி வித்தையில் வென்றது அர்ஜன்டினா; போராடி தோற்ற எம்பாபே Twitter
ஸ்போர்ட்ஸ்

FIFA 2022 : மெஸ்ஸியின் கண்கட்டி வித்தையில் வென்றது அர்ஜென்டினா; போராடி தோற்ற பிரான்ஸ்

Antony Ajay R

36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு கால்பந்து உலகக் கோப்பையை கைப்பற்றியிருக்கிறது தென்னமெரிக்க நாடான அர்ஜன்டினா. 

FIFA 2022 இறுதிப்போட்டி என்பது கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் அதி விறுவிறுப்பான போட்டியாக அறியப்படும்.

முதல் கோல் ஜாம்போவான் மெஸ்ஸியின் கால்களால் பெற்றது அர்ஜென்ட்டினா அணி.

36வது நிமிடத்தில் டி மரியா அர்ஜென்டினாவின் இரண்டாவது கோலை அடித்து 2-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.

அடுத்த 44 நிமிடங்களுக்கு அர்ஜென்டினா ரசிகர்கள் பாப்கார்னுடன் சாவகாசமாக மைதானத்தை அலங்கரித்தனர்.

ஆனால் 80வது நிமிடத்தில் ஆட்டத்தை மாற்றினார் எம்பாபே. ஒரு பெனால்டி, அடுத்த இரண்டு நிமிடத்துக்குள் அடுத்த கோல் என கலக்கினார்.

இதானால் ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது.

கூடுதலாக கொடுக்கப்பட்ட நேரம் முழுவதுமே இரு அணி ரசிகர்களும் உட்காரவேயில்லை. மைதானம் ரசிகர்களின் கண்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்தது.

மெஸ்ஸியின் கோலை உணர்ச்சிவசத்துடன் கொண்டாடிய அர்ஜென்டினா அணியினரின் சந்தோஷம் தொடர்ந்து நிலைக்கவில்லை.

எம்பாபே மற்றும் ஒரு கோல் அடித்ததும் ஆட்டம் பற்றி எரிந்தது.

அவரை சாமர்த்தியமாக மடக்கியும், அவரது கோலைத் தடுத்தும் போராடினர் அர்ஜென்டினா வீரர்கள். 

மீண்டும் ஆட்டம் டை ஆனதால், பெனால்டி வழங்கப்பட்டது.  அதில் அர்ஜென்டினா 4-2 என வென்றது. 

 1978, 1986 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து மூன்றாவது முறையாக அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வென்றிருக்கிறது.

டேனியல் பசரெல்லா, மரடோனாவைத் தொடர்ந்து தன் தாய் நாட்டுக்கு உலகக்கோப்பையை எடுத்துச் செல்கிறார் மெஸ்ஸி. அதுவும் தனது கடைசி சர்வதேச போட்டியில்... இனி வருங்காலமெங்கும் அவர் புகழ் தான் பாடப்படும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?