இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு கிடைக்கப் போகும் பரிசு தொகை என்ன?  Twitter
ஸ்போர்ட்ஸ்

FIFAWC: இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு கிடைக்கப் போகும் பரிசு தொகை எவ்வளவு?

இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்கு, உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். கால்பந்து ரசிகர்கள் அல்லாதவர்களுக்கும் இந்த இறுதிப்போட்டி ஆர்வத்தை தூண்டியுள்ளது

Keerthanaa R

கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ளது. நடப்பு சாம்பியனான பிரான்ஸ் நாடு, அர்ஜென்டீனாவுடன் மோதுகிறது.

பிரான்ஸ் இந்தப் போட்டியில் வென்று உலகக்கோப்பையை கைப்பற்றும் பட்கத்தில், 60 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை வென்ற ஒரே அணி என்ற சாதனையை படைக்கும்.

அதே சமயத்தில் அர்ஜென்டீனா வெல்லும் நிலையில், இது அந்த அணியின் மூன்றாவது உலகக்கோப்பை வெற்றியாகும். ஆனால், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு இதுவே முதல் உலகக் கோப்பை வெற்றி!

இறுதிப்போட்டிக்கு, உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். கால்பந்து ரசிகர்கள் அல்லாதவர்களுக்கும் இந்த இறுதிப்போட்டி ஆர்வத்தை தூண்டியுள்ளது

இன்றையப் போட்டியில் வெல்லும் அணி, தோல்வியுறும் அணி தலா எவ்வளவு பரிசு தொகையை எடுத்துச் செல்லப்போகின்றனர் என்று தெரியுமா? இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்ளுங்கள்

இரு அணிகளுக்கும் கிடைப்போகும் பரிசு தொகை என்ன?

இன்றையப் போட்டியில் வெல்லும் அணிக்கு உலகக்கோப்பை மட்டுமல்லாது ஒரு பெருந்தொகையும் வழங்கப்படும் என்பது நாம் அறிந்ததே. கோல்டன் டிராஃபியுடன் சேர்த்து வெற்றிபெறும் அணிக்கு 42 மில்லியன் டாலர்கள், அதாவது 344 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்.

இந்த போட்டியில் தோல்வியுறும் அணி, அதாவது ரன்னர் அப் ஆகும் அணிக்கு 30 மில்லியன் டாலர் - 245 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைக்கும்

மொராக்கோ குரோஷியாவுக்கும் பரிசு தொகை:

இவர்களை தவிர, கடந்த சனிக்கிழமையன்று நடந்து முடிந்த போட்டியில், குரோஷியா அணி மொராக்கோ அணியை வீழ்த்தி மூன்றாம் இடத்தை பிடித்தது. குரோஷியா அணிக்கு ரூ.220 கோடியும் (27 மில்லியன் டாலர்) வழங்கப்படும்.

மொராக்கோ அணிக்கு 25 மில்லியன் டாலர், அதாவது 204 கோடி ரூபாய் வழங்கப்படும்.

இன்றைய போட்டி:

இன்று மாலை 8.30 மணிக்கு தொடங்குகிறது அர்ஜென்டீனா - பிரான்ஸ் இடையிலான 2022ஆம் ஆண்டின் கால்பந்து இறுதிப்போட்டி. லுசெயில் ஐகானிக் மைதானத்தில் இப்போட்டி நடைபெறும்.

அர்ஜென்டீனா பிரான்ஸ் ஆகிய இரு அணிகளும் இதுவரை தலா 6 போட்டிகளில் விளையாடி, இரு அணிகளுமே 5ல் வென்றிருக்கிறது.

இதற்கு முன்னர் 2018 உலகக்கோப்பையின் போது அர்ஜென்டீனா பிரான்ஸ் அணிகள் மோதின. லீக் போட்டியான இதில், 4-3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி மெஸ்ஸியின் அர்ஜென்டீனாவை வீழ்த்தியது.

இதனால், இந்த இறுதிப்போட்டிக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடுதலாகவே இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?