World Cup: ரோஹித் - ஷமி அதிரடி - 129 ரன்களுக்கு நடைக்கட்டிய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து! twitter
ஸ்போர்ட்ஸ்

World Cup: ரோஹித் - ஷமி அதிரடி - 129 ரன்களுக்கு நடைக்கட்டிய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து!

Keerthanaa R

இங்கிலாந்துக்கு எதிராக ஆறாவது உலகக்கோப்பை போட்டியில் களமிறங்கிய இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இதன் மூலம், நடப்பு சாம்பியன்களான இங்கிலாந்து அணி, கிட்ட தட்ட அரையிறுதிக்கான வாய்ப்பை பறிகொடுத்துவிட்டது எனலாம்.

லக்னோவில் நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது. இந்த பருவத்தின் உலகக்கோப்பையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவே இல்லை. கடந்த ஐந்து போட்டிகளிலும் சேசிங் செய்தே வென்றனர்

முதன் முறையாக இன்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தடுமாறியது. கில் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழக்க, நம்பிக்கை நட்சத்திரம் கோலி டக் அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பினார்.

ரோஹித் சர்மா மறுபுறம், தனது பங்கினை செவ்வணே ஆற்றினாலும், இந்த பக்கம் அடுக்கி வைத்த சீட்டு கட்டு போல இந்திய அணி வீரர்கள் சரிந்தனர்.

ரோஹித் சர்மாவும் 87 ரன்களுக்கு அவுட் ஆக, ஒருவழியாக நம்பிக்கை அளித்தது சூர்யகுமார் யாதவ் தான்.

50 ஓவர்கள் முடிவில் வெறும் 229 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி.

230 என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து, ஷமி மற்றும் பும்ராவின் வேகத்தில் சிக்கி தவித்தது. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் 0 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் 27 ரன்கள் எடுத்திருந்தார். 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களும் இழந்து தோல்வியை தழுவியது நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி. இந்திய அணி சார்பில் ஷமி 4 விக்கெட்களும், பும்ரா 3 விக்கெட்களும் வீழ்த்தினர்

உலகக்கோப்பையில் முதன் முறையாக தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது இங்கிலாந்து.

கேப்டனாக தனது 100வது போட்டியில் களமிறங்கிய ரோஹித் சர்மா, 18,000 ரன்களை கடந்திருக்கிறார்.

இதுவரை நடந்த 6 போட்டிகளில் 56 விக்கெட்களை வீழ்த்தியுள்ளது இந்திய அணி. அது மட்டுமல்லாது இதுவரை தோல்வியே அடையாத அணியாகவும் உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?