இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது இந்திய அணி.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியை தென்னாபிரிக்க அணி வென்றது. இதனால் இந்திய ரசிகர்கள் வருத்தத்துக்கு உள்ளாகினர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கேப்டவுன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் இந்திய பௌலர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். முதல் இன்னிங்ஸில் முகமது சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட் வீழ்த்தினார்.
முதல் டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடததற்காக விமர்சிக்கப்பட்ட கேப்டன் ரோஹிட் சர்மா, இரண்டாவது போட்டியில் சரியாக விளையாடி, வெற்றியும் பெற்றுக்கொடுத்துள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 642 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளன. இதனால் கிரிக்கெட் வரலாற்றிலேயே குறைவான நேரத்தில் நடந்துமுடிந்த போட்டி என பதிவாகியிருக்கிறது.
இதற்கு முன்னர் 1932ம் ஆண்டு மெல்பர்னில் நடந்த ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டியில் 659 பந்துகள் மட்டுமே வீசப்பட்டது குறைவான நேரத்தில் நடந்த டெஸ்ட் போட்டியாக இருந்தது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust