Delhi Capitals Twitter
ஸ்போர்ட்ஸ்

IPL 2022: DC vs PBKS: பஞ்சாப் அணிக்கு 10 ஓவரில் பாடம் கற்பித்த டெல்லி; வாத்தியார் வார்னர்!

NewsSense Editorial Team

டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையில் நேற்று நடந்த ஆட்டத்தில் பத்தே ஓவர்களில் சேஸிங்கை முடித்து அசத்தியது டெல்லி அணி. இதனால் அந்த அணியின் ரன்ரேட் ஒரே போட்டியில் எகிறியது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பௌலிங்கை தேர்ந்தெடுத்தது. பவர்பிளேவுக்குள் இரண்டு ஓபனிங் பேட்ஸ்மேன்களையும் அதிரடி வீரர் லயம் லிவிங்ஸ்டனையும் இழந்தது. 6 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்திருந்தது.

ஆனால் பவர்பிலேயே முடிந்தவுடன் கலீல் அகமது பேர்ஸ்டோவை வீழ்த்தினார். 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 77 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் ஸ்கோர் 150 ரன்களையாவது தாண்டும் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் கடைசி 10 ஓவர்களில் ஆட்டம் முழுமையாக டெல்லி கட்டுப்பாட்டுக்குச் சென்றது.

13வது ஓவரின் முதல் பந்தில் ஜிதேஷ் ஷர்மா விக்கெட்டை அக்சர் படேல் வீழ்த்தினார். ஜிதேஷ் 23 பந்துகளில் 5 பௌண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார்.

குல்தீப் யாதவ்

அதற்கடுத்த ஓவரை வீசிய குல்தீப் யாதவ், ரபாடா மற்றும் நாதன் எல்லிஸ் என இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். அவர் வீசிய 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக்கான் இந்த ஐபிஎல் சீசனில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 20 பந்துகளைச் சந்தித்த அவர் வெறும் 12 ரன்கள் மட்டும் அடித்து வீழ்ந்தார்.

கடைசி ஓவர்களில் ரன்கள் குவிக்க பஞ்சாப் வீரர்கள் சிரமப்பட்டார்கள். 20 ஓவர்கள் முழுமையாக விளையாடியும் அந்த அணியால் 110 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

கடைசி 10 ஓவர்களில் வெறும் 38 ரன்கள் மட்டுமே எடுத்து ஆறு விக்கெட்டுகளை பறிகொடுத்தது பஞ்சாப் அணி.

வார்னர்

இதையடுத்து சேஸிங்கை தொடங்கிய டெல்லி இப்படி ஒரு ஆட்டத்துக்குத் தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன் என்பதுபோல்

எடுத்த எடுப்பிலேயே டாப் கியரை போட்டு நொறுக்கித் தள்ளியது. முதல் ஓவரிலேயே 14 ரன்கள் குவித்தது.

பிருத்வி ஷா மற்றும் வார்னர் இணை போட்டி போட்டுக்கொண்டு விளாசினார். ஒவ்வொரு ஓவரிலும் 10 ரன்களுக்கு மேல் குவித்துக் கொண்டிருந்தார்கள்.

ஐந்து ஓவர்களில் ஸ்கோர் 75-ஐ தொட்டது. இந்த மைதானத்தில் சில நிமிடங்களுக்கு முன்பு தான் பஞ்சாப் வீரர்கள் பந்துகளைத் தடவிக் கொண்டிருந்தார்கள், இப்போது டெல்லி அணியோ பின்னி எடுக்கிறது என ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தார்கள்.

பவர்பிளே முடிந்தவுடன் பிரித்வி ஷா அவுட் ஆனார். அவர் 20 பந்துகளில் ஏழு பௌண்டரிகள், ஒரு சிக்ஸர் வைத்து 41 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அதன் பின்னர் வார்னர் - சர்பிராஸ் ஜோடி 57 பந்துகள் மீதம் வைத்து ஆட்டத்தை முடித்து வைத்தது. 26 பந்துகளில் அரை சதமடித்தார் வார்னர். இது அவருக்கு ஐபிஎல்லில் 53வது அரை சதமாகும்.

நேற்றைய ஆட்டத்தில் 30 பந்துகளில் 10 பௌண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 60 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமலிருந்தார் வார்னர்.

ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி வென்றது. குல்தீப் யாதவும் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பஞ்சாப் அணியின் நெட் ரன்ரேட் சரமாரியாக சரிந்ததாதல் தற்போது பாயின்டஸ் டேபிளில் எட்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?