Delhi Capitals Twitter
ஸ்போர்ட்ஸ்

IPL 2022: கடைசி ஆளாய் வண்டியில் ஏறிய டெல்லி - RCB இனி வீட்டுக்குச் செல்ல வேண்டுமா?

தற்போதைய சூழலில் அதிகபட்சம் 16 புள்ளிகள் எடுக்கும் வாய்ப்பு டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு மட்டுமே உள்ளன. இதில் டெல்லி அணி தனது அடுத்த போட்டியில் வென்றால் எந்த கவலையும் வேண்டாம், பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும்.

NewsSense Editorial Team

ஐபிஎல் 2022 சீசனின் லீக் சுற்றில் முக்கியமான போட்டி ஒன்று நேற்று நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்ள டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு நேற்று ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இரு அணிகள் மோதிய போட்டியில் டெல்லி அணி பஞ்சாபை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. எனினும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விட அதிக ரன்ரேட் இருப்பதன் காரணமாக பாயின்டஸ் டேபிளில் நான்காமிடத்துக்கு முன்னேறியுள்ளது.

தற்போதைய சூழலில் அதிகபட்சம் 16 புள்ளிகள் எடுக்கும் வாய்ப்பு டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு மட்டுமே உள்ளன. இதில் டெல்லி அணி தனது அடுத்த போட்டியில் வென்றால் எந்த கவலையும் வேண்டாம், பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும்.

Points Table

அதுமட்டுமல்ல ராஜஸ்தான் மற்றும் லக்நௌ அணிகள் தங்களது அடுத்த போட்டியில் தோற்று, டெல்லி மட்டும் வென்றால் மூன்று அணிகளும் 16 புள்ளிகள் பெற்றிருக்கும். அப்போது அதிக ரன்ரேட் வைத்திருக்கும் அணிக்கு பாயின்டஸ் டேபிளில் இரண்டாமிடத்தைப் பிடித்து குவாலிபயர் 1 சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெறும்.

டெல்லி அணிக்கு தற்போது நல்ல ரன்ரேட் இருப்பதால் தூரத்தில் இரண்டாமிடத்துக்கான வாய்ப்பு காத்திருக்கிறது.

பஞ்சாப் அணி நேற்று தோற்றதையடுத்து பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட மங்கி விட்டது. எனினும் அந்த அணிக்கும் தொலைவில் ஒரு வாய்ப்பு இருக்கிறது. டெல்லி, பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் தமது அடுத்த போட்டியில் மோசமாகத் தோல்வியடையும் பட்சத்தில் தான் எதிர்கொள்ளும் ஹைதரபாத் அணியை பஞ்சாப் அபாரமாக வெல்ல வேண்டும்.

அப்போது ரன்ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் நான்காவது அணி முடிவு செய்யப்படும். அதில் நல்ல ரன்ரேட் இருந்தால் பஞ்சாப் உள்ளே செல்ல முடியும்.

Delhi

சரி நேற்றைய போட்டியில் என்ன நடந்தது?

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. லிவிங்ஸ்டன் பந்து வீச வந்தார். முதல் ஓவரின் முதல் பந்திலேயே வார்னர் விக்கெட்டை வீழ்த்தினார். எவ்வளவு பெரிய விக்கெட் அது !

ஆனால் அதனை பஞ்சாப் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இரண்டாவது ஓவரிலேயே இரண்டு சிக்ஸர்கள் வைத்து அசத்தினார் மிச்செல் மார்ஷ். மறுபுறம் தொடக்க வீரராக களமிறங்கிய சர்பிராஸ் கான் அருமையாக ஆடினார். அவர் 16 பந்துகளில் நான்கு பௌண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்கள் விளாசினார்.

ஆறு ஓவர்கள் முடிவில் அவர் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்திருந்தது டெல்லி. ஆட்டத்தின் பிற்பாதியில் தனது கட்டுப்பாட்டில் மேட்சை கொண்டு வந்தது பஞ்சாப். 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் மட்டுமே எடுத்தது டெல்லி.

மார்ஷ் மட்டும் 48 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.

Punjab

நம்பிக்கையுடன் சேஸிங் செய்யத் தொடங்கியது பஞ்சாப். நார்கே பந்துவீச்சில் பேர்ஸ்டோ அவுட் ஆனார். பவர்பிளேவின் கடைசி ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். அந்த ஓவரில் பனுகா ராஜபக்ஷ மற்றும் ஷிகர் தவான் என இரு பேட்ஸ்மேன்களையும் பெவிலியனுக்கு அனுப்பினார்.

அதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. பவர்பிளே முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்த டெல்லி அதன் பின்னர் 28 ரன்கள் முடிப்பதற்குள் மேலும் நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

ஜிதேஷ் ஷர்மா மட்டும் போராடிக் கொண்டிருந்தார். அவரையும் தனது வலையில் வீழ்த்தினார் ஷர்துல். இறுதியில் 142 ரன்களை மட்டுமே எடுத்தது பஞ்சாப்.

நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷர்துல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?