IPL 2023: இன்றும் மழை பெய்யுமா? அகமதாபாத் வானிலை எப்படியிருக்கிறது? Twitter
ஸ்போர்ட்ஸ்

IPL 2023: இன்றும் மழை பெய்யுமா? அகமதாபாத் வானிலை எப்படியிருக்கிறது?

Antony Ajay R

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி மழைக் காரணமாக நேற்று நடைபெறவில்லை.

நேற்று ஸ்டேடியத்தில் கூடியிருந்த ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

போட்டி அடுத்தநாளுக்கு அதாவது இன்று மாலை 7:30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஞாயிறோ திங்களோ இறுதிப்போட்டியைக் காண்பதற்கான ரசிகர்களின் ஆர்வம் சற்றும் குறையவில்லை.

தோனியும் மழையும்

ஏற்கெனவே இந்த சீசன் தோனியின் இறுதி சீசனாக இருக்கலாம் என்ற பேச்சுகள் எழுந்ததால் ரசிகர்கள் தங்கள் 'தல' -க்கு மரியாதை செலுத்தவே உற்சாகத்துடன் போட்டிக்கு விரைகின்றனர்.

ஆனால் தோனி "இன்னும் 8 மாதங்கள் இருப்பதால் பொறுமையாகவே அது குறித்து முடிவு செய்வேன்" எனக் கூறியுள்ளார்.

முன்னதாக தோனியின் கடைசி சர்வதேசப் போட்டியும் மழைக் குறுகீட்டால் அடுத்தநாளுக்கு மாற்றப்பட்டது. அதே சென்டிமென்டில் ரசிகர்கள் இது கடைசிப் போட்டியாக இருக்கலாம் எனக் கூறிவருகின்றனர்.

அகமதாபாத் வானிலை

மற்றொரு பக்கம் ரசிகர்களுக்கு இன்றும் மழைப் பெய்தால் என்ன நடக்கும் என்ற அச்சமும் இருக்கிறது. காலை நிலவரப்படி அகமதாபாத்தில் தெளிவான வானம் காணப்படுகிறது.

ஆனால் மாலையில் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

குறைந்த அளவுதான் மழை பெய்யுமென்பதால் போட்டி பாதிக்கப்படாது எனக் கூறப்படுகிறது.

ஆனால் மைதானத்தின் தன்மை மோசமானால் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் இருக்கும்.

மழையால் போட்டித் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டால் சூப்பர் ஓவர் மட்டும் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். சூப்பர் ஓவர் கூட நடத்த முடியாவிட்டால் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருக்கும் குஜராத் அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?