44,075 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு உரிமை - விரிவான தகவல்கள் NewsSense
ஸ்போர்ட்ஸ்

44,075 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு உரிமை - விரிவான தகவல்கள்

Niyasahamed M

இந்தியாவில் பல்வேறு மத நம்பிக்கைகள், கலாச்சாரங்கள், மொழி, உணவு, பழக்க வழக்கங்கள் என பல வேறுபாடுகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆனால் கிரிக்கெட் என்கிற விஷயத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, உசிலம்பட்டியில் தொடங்கி ஒக்லஹோமா வரை அனைவரும் ஒன்றிணைந்து இருக்கிறார்கள்.

ஐந்து நாட்கள் வரை நீடித்த ஆட்டத்தையே குத்த வைத்து பார்த்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு, தற்போது வெறும் 3 - 4 மணி நேரத்தில் போட்டியின் முடிவு தெரிந்துவிடும் என்கிற போது, இந்தியாவில், இந்தியர்கள் மத்தியில் கிரிக்கெட் ஜுரம் 102 டிகிரியைத் தொட்டது என்றால் மிகையில்லை.

தற்போது, 2023 - 2027ஆம் ஆண்டு வரை நடக்கவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கான இரண்டு நாள் ஏலம் நடந்து கொண்டிருக்கிறது.

இதில் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை தொலைக்காட்சி சேனல் மூலம் ஒளிபரப்பவும், அதே போட்டிகளை இணையத்தில் ஒளிபரப்பவும் இரு வேறு நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி ரூபாயைக் கொடுத்து ஏலம் கோரியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

2023 - 2027 வரையான ஐபிஎல் போட்டிகளை பல்வேறு தளங்களில் ஒளிபரப்புவதற்கான உரிமத்தை நான்கு வகையாகப் பிரித்து ஏலம் விடப்பட்டது.

அடிப்படை விலை விவரங்கள்

பேக்கேஜ் ஏ (இந்தியாவில் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்புவது) - ஒரு போட்டிக்கு 49 கோடி ரூபாய்

பேக்கேஜ் பி (இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை இணைய தளம் மூலம் ஒளிபரப்புவது) - போட்டி ஒன்றுக்கு 33 கோடி ரூபாய்

பேக்கேஜ் சி (ஒரு சீசனில் நடைபெறும் 18 பிரத்யேகமாக ஒதுக்கப்படாத போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை) - போட்டி ஒன்றுக்கு 11 கோடி ரூபாய்

பேக்கேஜ் டி (வெளிநாட்டில் ஒளிபரப்பும் உரிமைகள்) - போட்டி ஒன்றுக்கு 3 கோடி ரூபாய்... என நிர்ணயிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.

இந்த ஏலத்தில் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பும் உரிமத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (2023 - 2027) சோனி நிறுவனம் வென்றிருக்கலாம் என லைவ் மின்ட் தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த உரிமத்துக்கு 23,575 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது.

அதே போல மேற்கூறிய காலத்தில், இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை இணையதளத்தில் ஒளிபரப்பும் உரிமத்தை ரிலையன்ஸ் - வயாகாம் நிறுவனம் வென்றிருக்கலாம் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி இதுவரை அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இவ்வுரிமத்துக்கு 20,500 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தொலைக்காட்சி மற்றும் இணையதளத்தில் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப 44,075 கோடி ரூபாய் ஏலத்தில் கோரப்பட்டுள்ளது இந்திய வரலாற்றிலேயே இதுவே முதல்முறை.

கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் ஐபிஎல் போட்டியிலிருந்து 2017 வரையான 10 சீசன் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை சோனி நிறுவனம் 8,200 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

2018 முதல் 2022 வரையான ஐந்து ஆண்டுகளில் நடந்த போட்டிகளை ஒளிபரப்ப ஸ்டார் குழுமம் சுமார் 16,350 கோடி ரூபாயைக் கொடுத்தது. இந்த முறை ஐந்து சீசன் போட்டிகளை ஒளிபரப்ப, கடந்த ஏலத்தில் கோரப்பட்ட விலையை விட சுமார் 1.6 மடங்கு கூடுதல் விலை கோரப்பட்டுள்ளது.

2023 - 2027 வரையான ஐந்து ஆண்டு காலத்தில், மொத்தம் 410 போட்டிகள் நடக்க உள்ளன. முதல் மூன்று சீசனில் ஒரு சீசனுக்கு 74 போட்டிகளும், கடைசி இரு சீசன்களில் சீசனுக்கு 94 போட்டிகளும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?