CSK vs GT Final: குஜராத் அணிக்கு தான் கோப்பையா? மைதான திரையிடப்பட்ட புகைப்படத்தால் சர்ச்சை Twitter
ஸ்போர்ட்ஸ்

CSK vs GT Final: குஜராத் அணிக்கு தான் கோப்பையா? மைதான திரையிடப்பட்ட புகைப்படத்தால் சர்ச்சை

Keerthanaa R

ஐபிஎல் 2023ன் ரன்னர்ஸ் அப் சென்னை சூப்பர் கிங்ஸ் என நரேந்திர மோடி மைதானத்தில் திரையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் ஐபிஎல் இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியன்களான குஜராத் அணி, 4 முறை சாம்பியன் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

நேற்று நடைபெறவிருந்த இறுதிப்போட்டி, மழையின் காரணமாக தடைப்பட்டது. இரவு 11 மணி வரை மழை நிற்கவில்லை என்றால், ரிசர்வ் டே ஆன இன்று (29 மே) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று மைதானத்தின் திரையில் ஒரு வாசகம் வெளியிடப்பட்டது. அது தான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

அந்த திரையில், “Runners Up Chennai Super Kings" என்றிருந்தது. இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாக பரவியது.

இதனைத் தொடர்ந்து அனைவரும் ஐபிஎல் இறுதிப்போட்டியின் முடிவுகள் முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டதா எனவும், மேட்ச் ஃபிக்ஸிங் செய்யப்பட்டுள்ளதா எனவும் கேள்விகள் எழுப்பத் தொடங்கினர்.

இது குறித்த விவாதங்களும் ட்விட்டரில் அனல் பறந்தன. ஒருவர் இது மேட்ச் ஃபிக்சிங் தான் எனக் கூற, மற்றொருவரோ அவரை பொறுமையாக இருக்கும்படி கூறிவிட்டு, இது ஸ்க்ரீன் டெஸ்டிங் முறை தான் என சமாதானம் கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பும், இந்த சீசனுடன் சென்னை அணியின் கேப்டன் தோனி ஓய்வு பெறுவார் என்ற கணிப்புகளும் வலுவாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் முன்பே முடிவு செய்யப்பட்டவை, இது ஸ்க்ரிப்டட் என்ற பேச்சுக்கள் தீவிரமாக இருந்து வருகிறது. இதுவும் இந்த புகைப்படம் வைரலாக மற்றொரு காரணமாக பார்க்கப்படுகிறது

இந்த புகைப்படத்துக்கு ட்விட்டரில் வந்த சில ரியாக்‌ஷன்கள் சில...

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?