ISPL T10 : கிரிக்கெட்டிலும் தடம் பதித்த நடிகர் சூர்யா! எப்படி தெரியுமா? Twitter
ஸ்போர்ட்ஸ்

ISPL T10 : கிரிக்கெட்டிலும் தடம் பதித்த நடிகர் சூர்யா! எப்படி தெரியுமா?

Priyadharshini R

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. சூர்யா நடிப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பு நிறுவனம், அகரம் அறக்கட்டளை என பல பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சூர்யா கிரிக்கெட்டிலும் தடம் பதித்துள்ளார். அதாவது, டி10 தொடர் தற்போது இந்தியாவில் நடத்தப்படவுள்ளது.இந்த போட்டி 10 ஓவர்களை கொண்டது.

இந்த தொடரில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன.

2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்த தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர்.

அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' திரைப்படத்திலும், 'வாடிவாசல்', 'சூர்யா 43' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் சூர்யா .

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?