Brendon McCullum Twitter
ஸ்போர்ட்ஸ்

Cricket : இங்கிலாந்து டெஸ்ட் அணி பயிற்சியாளராக மெக்கல்லம் நியமனம்

Keerthanaa R

முன்னாள் நியூசிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் அணியின் தலைமை கோச்சாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐபிஎல்-ல் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக தற்போது செயல்பட்டு வருகிறார்.

வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி லார்ட்ஸில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து விளையாடவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலிருந்து, தன் பயிற்சியை துவங்கவுள்ளார். மொத்தம் நான்கு வருட கால ஒப்பந்தத்தில் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் இவரை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

McCullum & Morgan

நியூசிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான மெக்கல்லாம் இதுவரை 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,453 ரன்களை குவித்துள்ளார். இதில் 12 சதங்கள், 31 அரை சதங்கள் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் இவரது அதிகபட்ச ரன் சேகரிப்பு 302.

பவுலிங்கில் 1 விக்கெட், 198 கேட்சுகள், 11 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார். இவர் நியூசிலாந்தின் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் தலைமை பொறுப்பு வகித்துள்ளார்.மேலும் டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையும் இவருக்குச் சேரும்.

McCullum

முன்னாள் கொல்கத்தா அணியின் கேப்டனும், தற்போதைய இங்கிலாந்து அணியின் கேப்டனுமான இயான் மோர்கனுக்கும் இவருக்குமான நட்பு பலரால் வியந்துப்பார்க்கபட்டு வந்த நிலையில், இவர்களது ஜோடி மேலும் அணிக்கு வலுவூட்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2019ல் அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற மெக்கல்லம் வர்ணனையாளராகவும் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?