World Cup வென்ற Messi -க்கு மனைவி எழுதிய உருக்கமான குறிப்புகள் - வைரலாகும் பதிவு டிவிட்டர்
ஸ்போர்ட்ஸ்

World Cup வென்ற Messi -க்கு மனைவி எழுதிய உருக்கமான குறிப்புகள் - வைரலாகும் பதிவு

Antony Ajay R

அர்ஜென்டினா வீரர், லியோனல் மெஸ்ஸி நேற்றைய போட்டியில் மிகப் பெரிய போராட்டத்துக்குப் பிறகு தனது நாட்டுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

அணியின் கேப்டனாக பொறுப்புடன் விளையாடிய அவரை அனைவரும் பாராட்டி வரும் சூழலில் அவரது மனைவி அவருக்காக எழுதிய குறிப்புகள் சிறப்பாக பாராட்டப்பட்டு வருகிறது.

மெஸ்ஸியின் மனைவி அன்டோனெலா ரோக்குசோ தனது இஸ்டாகிராமில் மெஸ்ஸி பற்றி உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

அன்டோனெலா மற்றும் மெஸ்ஸி இருவரும் 8,9 வயதிலிருந்தே நண்பர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"உலக சாம்பியன்கள். இதனை எப்படித் தொடங்குவது எனத் தெரியவில்லை. லியோனல் மெஸ்ஸி உனக்காக நாங்கள் பெருமை கொள்கிறோம். எப்போதும் விட்டுக்கொடுக்காமல் இருக்க எங்களுக்கு கற்பித்ததற்கு நன்றி, முடியும் வரை நாம் இப்படித்தான் போராட வேண்டும்.

இது இறுதியாக முடிவுக்கு வந்தது, நீ ஒரு உலக சாம்பியன். இதையடைய இத்தனை ஆண்டுகளாக எத்தனை கஷ்டங்களை எதிர்கொண்டீர்கள். இதை சாதிக்க எவ்வளவு ஆசைப்பட்டீர்கள். வாருங்கள் அர்ஜென்டினாவுக்கு போகலாம்" என அன்டோனெலா எழுதியிருந்தார்.

2007 ஆண்டு காதலிக்கத் தொடங்கிய மெஸ்ஸி மற்றும் அன்டோனெலா 2009ம் ஆண்டு வெளிப்படையாக தங்கள் உறவை அறிவித்தனர்.

பின்னர் 7 ஆண்டுகள் காதலித்து 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்துக்கு முன்னரே இந்த தம்பதிக்கு தியாகோ மெஸ்ஸி, மேடியோ மெஸ்ஸி என இரண்டு மகன்கள் இருந்தனர்.

திருமணத்துக்கு பின்னர் 2018ம் ஆண்டு இவர்களுக்கு சிரோ என்ற மகன் பிறந்தான்.

இந்த உலகக் கோப்பைக்கு பிறகு மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் விளையாட மாட்டார் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் அதனை மறுத்து, "மீண்டும் களமிறங்குவேன். உலகசாம்பியன் என்ற கௌரவத்தை அனுபவித்து விளையாடுவேன்" என மெஸ்ஸின் கூறியது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?