MSD- Rishab Pant News Sense
ஸ்போர்ட்ஸ்

ரிஷப் பண்ட்டுடன் Insta Liveல் இணைந்த தோனி - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் |Video

Keerthanaa R

இன்ஸ்டாகிராமில் லைவ் என்ற ஒரு புதிய அப்டேட் செய்ததிலிருந்து நட்சத்திரங்கள் பலரும் லைவில் வந்து ரசிகர்களுடன் சாட் செய்வதுண்டு.

இன்ஸ்டா லைவ்

அந்த வகையில், நேற்று இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் இன்ஸ்டா லைவில் இணைந்தனர். இதில் ரசிகர்கள் பலரும் இந்த வீரரை லைவ் சாட்டில் அழையுங்கள் என்று கோரிக்கைகள் விடுத்து வந்தனர்.

தோனியின் தீவிர ரசிகர்

இந்திய அணியின் சுட்டிக்குழந்தையாக கருதப்படும் ரிஷப் பண்ட், தான் செய்யும் சேட்டைகளுக்கு பெயர் பெற்றவர். இதே போல இவர் இந்திய அணி முன்னாள் கேப்டன் தல தோனியின் அதி தீவிர ரசிகரும் கூட.

பல முறை தோனி விளையாடிக்கொண்டிருக்கும் போது ஆட்டத்தை கவனிப்பதை விட தோனியை இவர் மைதானத்தில் ரசிக்கும் புகைப்படங்கள் வைரலானது நாம் அறிந்ததே. இதனால், நேற்று லைவில் உரையாடிக்கொண்டிருக்கும்போது தோனியை அழைத்தார் ரிஷப்.

லைவில் இணைந்த தோனி

தோனியும் லைவில் இணைய இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. முதலில் தோனியின் மனைவி ரசிகர்களுக்கு ஹாய் சொல்லிவிட்டு, பின்னர் தோனியின் பக்கம் ஃபோனை திருப்பினார். ரசிகர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு தோனியை பார்த்ததில் உற்சாகம் அடைந்திருந்தனர்.

ரசிகர்களுக்கு தோனி ஹாய் சொல்ல, ரிஷப் பண்ட் ரோஹித்திடம், "எப்படியாவது சிறிது நேரம் தோனியை லைவில் இருக்க செய்து பேசவையுங்கள்" என்றார். ஆனால் தோனி லைவிலிருந்து வெளியேறிவிட்டார்.

மேற்கு இந்திய தொடர்

இந்திய அணி தற்போது மேற்கு இந்திய அணியுடன் விளையாடிக்கொண்டிருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுகிறது.

ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வென்று தொடரில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், நேற்று ஜாலியாக இந்திய அணி வீரர்கள் இன்ஸ்டா லைவில் சாட் செய்துள்ளனர்.

இந்திய வீரர்கள் ரிஷப் பண்ட் ரோஹித் சர்மா ஆகியோர் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் விளையாடவில்லை. டி20 தொடருக்கான அணியில் இவர்கள் இடம்பெற்றிருப்பதால் நேற்று ரிஷப் பண்ட் மேற்கு இந்திய தீவுக்கு சென்றார். இவர்களுடன், பந்துவீச்சாளர்கள் ரவிசந்திரன் அஷ்வின் மற்றும் குல்தீப் யாதவும் டி20 தொடரில் விளையாடவுள்ளனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?