Pele ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

Pele: 'கறுப்பு முத்து' பீலே மரணம் - முடிவுக்கு வந்ததது ஓர் அசாத்திய சகாப்தம்!

கால்பந்து உலகின் மன்னன், மூன்று முறை உலகக்கோப்பை வென்ற ஓரே வீரர், உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்த வீரன், தனது அசாத்திய திறமையால், கால்பந்து விளையாட்டை உலக மக்களின் கவனத்திற்கு இட்டு சென்றவர் என பீலேவின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போனால், இந்த கட்டுரை ஒன்று பத்தாது!

Keerthanaa R

பிரேசிலை சேர்ந்த கால்பந்து வீரர் பீலே காலமானார். கால்பந்து வரலாற்றில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பீலே கடந்த சில மாதங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று தனது 82வது வயதில் காலமானார்.

கால்பந்து உலகின் மன்னன், மூன்று முறை உலகக்கோப்பை வென்ற ஓரே வீரர், உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்த வீரன், தனது அசாத்திய திறமையால், கால்பந்து விளையாட்டை உலக மக்களின் கவனத்திற்கு இட்டு சென்றவர் என பீலேவின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போனால், இந்த கட்டுரை ஒன்று பத்தாது!

தந்தைக்கு செய்த சத்தியம்:

கிரிக்கெட்டுக்கு எப்படி சச்சின் டெண்டுல்கரை நாம் அடையாளம் சொல்கிறோமோ அப்படி கால்பந்தின் அடையாளமாக திகழ்ந்தார் பீலே.

அக்டோபர் 23 1940ல் பிறந்தார் பீலே. வறுமையுடனும், பசியுடனும் தனது ஆரம்பக்காலத்தில் போராடினார். ஷூ பாலிஷ் போடுவது, வீட்டு வேலை செய்வது தான் இவரது பாலிய காலம்.

1950ல் பிரேசில் கால்பந்து உலகக்கோப்பையில் தோற்றப்போது, அழுத தந்தையை தேற்றுவதற்காக "ஒரு நாள் நான் பிரேசிலுக்கு உலகக்கோப்பையை வென்று தருவேன்" எனக் கூறினார்.

முதல் உலககோப்பை:

கிளப்களில் விளையாடி வந்த பீலே, தன் 16வது வயதில் முதன் முறையாக பிரேசில் அணியில் இடம்பெற்றார்.

1958ல், தன் 18வது வயதில் முதல் உலகக்கோப்பை போட்டியில் விளையாடினார் பீலே.

இரண்டு கோல்கள் அடித்து, பிரேசிலுக்கு முதல் உலகக்கோப்பையை பெற்று தந்தார். தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றினார்.

பிரேசிலின் அடையாளம் மாறியது:

கார்கோவடோ மலையில் அமைந்திருக்கும் இயேசு சிலைக்கு பின்னர், பிரேசிலின் அடையாளமாகவே மாறினார் பீலே.

அதனை தொடர்ந்து 1962, 1970 ஆகிய ஆண்டுகள் நடந்த உலகக்கோப்பையையும் தொடர்ச்சியாக வென்றது பிரேசில் அணி.

மூன்று உலகக்கோப்பையை தொடர்ந்து வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை அடைந்தார் பீலே. அணியின் மூன்று உலகக்கோப்பை வெற்றிகளுக்கும் பீலே முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

அதிக கோல்கள்:

உலகக்கோப்பையில் மட்டும் தனது அணிக்காக இவர் 12 கோல்களை அடித்துள்ளார். இவர் பிரேசில் அணிக்காக 92 போட்டிகளில் விளையாடி, 77 கோல்களை அடித்துள்ளார்.

தனது வாழ்நாளில் மொத்தம் 1,281 கோல்களை அடித்து உலக சாதனை படைத்திருக்கிறார். FIFA உலகக்கோப்பையில் அதிக வெற்றிகளை பெற்ற வீரர் என்ற கின்னஸ் சாதனையும் இவருக்கு சொந்தம்.

கறுப்பு முத்து:

இதன் பிறகு 1971 ஆம் ஆண்டு பீலே கால்பந்து விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றார். பிரேசில் நாட்டின் விளையாட்டு துறை அமைச்சராகவும் பீலே பதவி வகித்திருந்தார்.

கால்பந்து கிங், கால்பந்து உலகின் 'கறுப்பு முத்து' (Black Pearl) என்று கால்பந்தை தாண்டியும் உலகம் இவரை கொண்டாடியது.

இவரது மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு என ரசிகர்கள், உலக மக்கள் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?