Prangnanandha Twitter
ஸ்போர்ட்ஸ்

உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய பிரக்ஞானந்தா- நாக் அவுட்டுக்கு வாய்ப்பு

Keerthanaa R

இணையத்தில் ரேபிட் செஸ் தொடர், செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் நடந்து வருகிறது. மொத்தம் 16 செஸ் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, மற்றும் உலகின் இளைய கிராண்ட் மாஸ்டரான அபிமன்யு மிஸ்ராவும் பங்கேற்றுள்ளனர்.

இன்று நடந்த 5வது சுற்றில், உலக சாம்பியனும், நம்பர் ஒன் செஸ் வீரருமான மேஹ்னஸ் கார்ள்ஸனை ரமேஷ் பாபு பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களோடு பிரக்ஞானந்தா விளையாடினார். அப்போது, 40வது நகர்த்தலில்(40th move) பிரக்ஞானந்தா கார்ல்சனிடமிருந்து வெற்றியை தட்டிப்பறித்துக் கொண்டார்.

Prangnanandha

இந்த வெற்றியின் மூலம் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை பிரக்ஞானந்தா தக்கவைத்திருக்கிறார். மூன்று மாத இடைவெளியில், இரண்டாவது முறையாக கார்ல்சனை இந்த இளம் கிராண்ட் மாஸ்டர் வீழ்த்தியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியின் எட்டாவது சுற்றில் இருவரும் சந்தித்தனர். அதிலும் பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தியிருந்தார்.

Prangnanandha

யார் இந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா?

அபிமன்யு மிஸ்ரா, செர்ஜி கர்ஜாகின், குகேஷ் டி மற்றும் ஜாவோகிர் சிந்தரோவ் ஆகியோருக்குப் பிறகு ஐந்தாவது இளைய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவர் பிரக்ஞானந்தா.இவர் பெண் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ரமேஷ் பாபுவின் இளைய சகோதரர்.

2013 ஆம் ஆண்டில், பிராக்ஞானந்தா ஏழு வயதில், எட்டு வயதிற்குட்பட்ட உலக இளையோர் சதுரங்க சாம்பியன்ஷிப்பை வென்றார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் 10 வயதிற்குப்பட்டோருக்கான பட்டத்தை வென்றார். 2016 ஆம் ஆண்டில், அவர் தனது 10 வயதில் இந்த சாதனையை நிகழ்த்தி, விளையாட்டு வரலாற்றில் இளம் சர்வதேச மாஸ்டர் ஆக புகழ் பெற்றார்.

Mother, Prangnanandha, and sister

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?