RR vs CSK: 5வது முறையாக CSKவை வீழ்த்திய ராஜஸ்தான்! தோல்விக்கு பின் தோனி என்ன பேசினார்? Twitter
ஸ்போர்ட்ஸ்

RR vs CSK: 5வது முறையாக CSKவை வீழ்த்திய ராஜஸ்தான்! தோல்விக்கு பின் தோனி என்ன பேசினார்?

வலுவான பேட்டிங், தேவைப்பட்ட நேரத்தில் பௌண்டரிகள், சிக்ஸர்கள், வேலையை கச்சிதமாக செய்த இம்பாக்ட் பிளேயர்கள், போட்ட திட்டத்திற்கு ஏற்ப பந்து வீசி தக்க சமயத்தில் விக்கெட்களை வீழ்த்திய பௌலர்கள் என, சஞ்சு சாம்சன் வகுத்த வியூகத்தில் பக்காவாக வந்து விழுந்தனர், அனுபவமிக்க சென்னை வீரர்கள்.

Keerthanaa R

கடந்த 6 முறையாக ராஜஸ்தான் ராயல்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டதில், 5 முறை தோல்வியை தழுவியிருக்கிறது சென்னை அணி.

கேப்டன் கூல் தோனியே நேற்றைய ஆட்டத்தில் தனது கூலை இழக்க, மிகவும் சாதுவாக அணியை வெற்றிப்பாதையில் இட்டுச் சென்றார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன்.

வலுவான பேட்டிங், தேவைப்பட்ட நேரத்தில் பௌண்டரிகள், சிக்ஸர்கள், வேலையை கச்சிதமாக செய்த இம்பாக்ட் பிளேயர்கள், போட்ட திட்டத்திற்கு ஏற்ப பந்து வீசி தக்க சமயத்தில் விக்கெட்களை வீழ்த்திய பௌலர்கள் என, சஞ்சு சாம்சன் வகுத்த வியூகத்தில் பக்காவாக வந்து விழுந்தனர், அனுபவமிக்க சென்னை வீரர்கள்.

இது ராஜஸ்தான் அணியின் 200வது போட்டி. இதில் சிறப்பாக விளையாடி அணி வெற்றிப்பெற்றது மகிழ்ச்சி எனவும், எங்கள் அணியின் திறனை ஆராய்ந்து, எனது இண்டியூஷனை வைத்து முடிவுகளை எடுத்தேன் எல்லாம் சரியாக நடந்தது எனவும் கூறினார் சஞ்சு சாம்சன்.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் பேட்டர்கள், 20 ஓவர் முடிவில் 202 ரன்கள் குவித்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்கள் சேர்த்தார்.

களமிறங்கிய சென்னை அணி தொடக்கம் முதலே தடுமாறியது. ஆர் ஆர் அணியின் பௌலிங்கை எதிர்கொள்ள முடியாமல் சரிந்தனர். எந்த பந்தையும் பௌண்டரிக்கு அல்ல, சிங்கிள் எடுக்கக் கூட அங்கு சிரமமாக தான் இருந்தது 6 விக்கெட்களை இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன் வித்தியாசத்தில் தோற்றது சென்னை அணி. அதிகபட்சமாக சிவம் தூபே 50 ரன் எடுத்தார்.

போட்டி முடிந்து பேசிய சென்னை அணி கேப்டன் தோனி தங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை எனவும், பவர்பிளேவின் போது அதிக ரன்களை சென்னை பௌலர்கள் விட்டுக்கொடுத்துவிட்டனர் என்றார்.

“இது சராசரி ஸ்கோரை விட அதிகம் தான். பிட்ச் பேட்டிங்கிற்கு ஏதுவாக இருந்தது, மிடில் ஓவர்களில் நாங்கள் ரன்களை கட்டுப்படுத்தினாலும், கடைசி ஓவர்களில் எட்ஜ் ஆகி நிறைய பௌண்டரிகள் வந்தன. அது ஸ்கோரை ஏற்றியது.

நாங்கள் பேட்டிங் ஆடும்போது எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை”

மேலும் பேசியவர் ஜைஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடினார், ஜுரேல் அடித்த முதல் சிக்ஸர், போட்டியை எங்களிடம் இருந்து பறித்துக்கொண்டது என்று கூறினார்.

மீண்டும் மைதானத்தில் மஞ்சள் படையை பார்த்தபோது என்ன தோன்றியது எனக் கேட்டபோது, “இவர்கள் என்னை எங்கு சென்றாலும் துரத்திக்கொண்டு வருவார்கள். எனக்கு ஜைப்பூர் மைதானம் மிகவும் ஸ்பெஷல். இங்கு நான் அடித்த 183 ரன்கள் எனக்கு இந்திய அணியில் ஓர் இடத்தை பெற்று தந்தது. இங்கு எப்போது வந்தாலும் சந்தோஷமாக இருக்கும்” என்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?