Sports NewsSense
ஸ்போர்ட்ஸ்

IPL 2022 - RR Vs LSG : 165 தான் ஸ்கோர், ஆனால் விறுவிறுப்பான மேட்ச்; அசத்திய ராஜஸ்தான்

விக்கெட் கொடுக்கல சரி, ஆனால் ரன் அடிக்கணும்ல என ரசிகர்கள் கத்தியது நியாபகம் வந்ததோ என்னவோ, அட ஆமால்ல அத மறந்துட்டேனே என அஷ்வவின், 16-வது ஓவரை வீசிய கௌதம் பந்தில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் வைத்தார்.

NewsSense Editorial Team

சமீப நாட்களாக ஐபிஎல் போட்டிகள் சுவாரஸ்யமின்றி சப்பென முடிந்துவந்த நிலையில் ஞாயிற்று கிழமை இரவு நடந்த ராஜஸ்தான் மற்றும் லக்நௌ இடையிலான போட்டி ஒரு த்ரில்லராக அமைந்தது. 

166 ரன்கள் எனும் இலக்குடன் விளையாடிய லக்நௌ அணி, கடைசி இரு பந்துகளில்  ஒரு பௌண்டரி சிக்ஸர் வைத்து முடித்தது. ஆனால் அவை இலக்கை எட்ட போதுமானதாக அமையவில்லை. இதனால் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது  லக்நௌ.

ராஜஸ்தான் மாஸ் காட்டியது எப்படி?

லக்நௌ அணி டாஸ் வென்று வழக்கம் போல சேஸிங்கை தேர்ந்தெடுத்தது. படிக்கலும் பட்லரும் களமிறங்கினர். பவர்பிளேவில் பட்லர் விக்கெட்டை இழந்தாலும் 42 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான். பிறகு வந்த சாம்சன் 12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து வீழ்ந்தார்.

ஆட்டத்தின் பத்தாவது ஓவரை வீச வந்த கிருஷ்ணப்ப கௌதம் படிக்கல், வாண்டர் டூசன் என இருவரது விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.

அப்போது ராஜஸ்தான் 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்த்திருந்தது.

அஷ்வின் மற்றும் ஹெட்மேயர் அடுத்த ஐந்து ஓவர்கள் பொறுமையாக விளையாடி விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். 15 ஓவர்கள் முடிவில் 92 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான்.

விக்கெட் கொடுக்கல சரி, ஆனால் ரன் அடிக்கணும்ல என ரசிகர்கள் கத்தியது நியாபகம் வந்ததோ என்னவோ, அட ஆமால்ல அத மறந்துட்டேனே என அஷ்வவின், 16-வது ஓவரை வீசிய கௌதம் பந்தில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் வைத்தார்.

கடைசி கட்டத்தில் அஷ்வின் ரிட்டயர்டு அவுட் ஆக, கடைசி மூன்று ஓவர்களில் மட்டும் 50 ரன்கள் மட்டும் குவித்தது ராஜஸ்தான், ஹெட்மேயர் 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அப்பாடா, ஒருவழியாக 170 ரன்களுக்குளேயே சுருட்டியாச்சு என நிம்மதியாக சேஸிங்கை தொடங்கியது ராகுல் படை. ஆனால் எடுத்த எடுப்பிலேயே புல்லட்டை இறக்கினார் ராஜஸ்தான் பௌலர் டிரென்ட் போல்ட்.

போல்ட் வீசிய முதல் பந்தே இன்ஸ்விங் ஆகி லக்நௌ கேப்டன் கே.எல்.ராகுல் விக்கெட்டை தகர்த்தது. நைட் வாட்ச்மேன் போல் தீடீரென கிருஷ்ணப்ப கௌதமை களமிறக்கியது லக்நௌ. ஆனால் போல்ட் வீசிய அடுத்த பந்தியேயே எல்.பி ஆகி வேளியேறினார் கிருஷ்ணப்ப கௌதம்.

அசராத லக்நௌ மீண்டும் அடுத்த பௌலரை பேட்டிங் செய்ய அனுப்பியது. ஆம் முதல் ஓவரின் மூன்றாவது பந்தை சந்திக்க ஜேசன் ஹோல்டர் அனுப்பப்பட்டார்.

பவர்பிளேவில் 14 பந்துகளை மென்று தின்று எட்டு ரன்களை அடித்துவிட்டு வெளியேறினார். அதன்பின்னர் அஷ்வின், சாஹல் பந்துகளில் லக்நௌ பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்கவே சிரமப்பட்டனர்.

16 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் அடுத்த மூன்று ஓவர்களில் அதிரடியாய் ஆடி 45 ரன்கள் குவித்தது.

இதனால் கடைசி ஓவரில் பரபரப்பு ஏற்பட்டது. 15 ரன்கள் அடித்தால் வெற்றி எனும் இலக்கு. ஆவேஷ் கான் மற்றும் ஸ்டாய்னிஸ் இருந்தனர். அதிகம் அனுபவம் இல்லாத குல்தீப் சென் வீசினார்.

முதல் பந்தை எதிர்கொண்ட ஆவேஷ்கான் ஒரு ரன் எடுத்து ஸ்டாய்னிஸிடம் ஸ்ட்ரைக் கொடுத்தார். ஆனால் ஸ்டாய்னிஸ் அடுத்த மூன்று பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்கவில்லை. அங்கேயே ராஜஸ்தான் வெற்றி உறுதியானது. கடைசி இரு பந்துகளில் அவர் பௌண்டரி மற்றும் சிக்ஸர் விளாசியும் 'எந்த பலனும் இல்ல' என மேட்ச் முடிந்தது.

நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய சாஹல் ஆட்டநாயகன் விருது வென்றார்.

முன்னதாக நேற்று மாலை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் கொல்கத்தா அணியை சாத்து சாத்து என சாத்தியது.

முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 215 ரன்கள் அடித்தது, கொல்கத்தாவால் 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி பெற்றது. நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய டெல்லி வீரர் குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார்.

நேற்றைய தினம் டாஸ் வென்று சேசிங்கை தேர்ந்தெடுத்த இரு அணிகளும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

இப்போது ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் டாப் ரன்ரேட் உடன் முதலிடத்தில் உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?