WTC: ”இந்தியாவை எதிர்கொள்வது சவாலான விஷயம் தான்” என்ன சொல்கிறார் ஸ்டீவ் ஸ்மித்? Twitter
ஸ்போர்ட்ஸ்

WTC: ”இந்தியாவை எதிர்கொள்வது சவாலான விஷயம் தான்” என்ன சொல்கிறார் ஸ்டீவ் ஸ்மித்?

நாளை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்குகிறது. இதில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கோலி, சிராஜ், ஷமி போன்ற வீரர்களை கொண்டுள்ளதால் இந்திய அணியுடனான இந்த போட்டி சவலானதாக தான் இருக்குமெனக் கூறியுள்ளார் ஸ்மித்.

Keerthanaa R

கோலி, ஷமி போன்ற வீரர்களை அணியில் கொண்டுள்ளதால் நாளைய இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்வது சற்றே சவலான விஷயம் தான் எனக் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

நாளை, ஜூன் 7 ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி ஆஸ்திரேலியாவின் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இதில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் முடிந்த கையோடு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சிகளுக்காக ஆச்திரேலியா சென்றடைந்தனர்

இந்நிலையில், நாளைய இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்வது சற்றே சவலான விஷயம் தான் எனக் கூறியுள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

நாளை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்குகிறது. இதில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கோலி, சிராஜ், ஷமி போன்ற வீரர்களை கொண்டுள்ளதால் இந்திய அணியுடனான இந்த போட்டி சவலானதாக தான் இருக்குமெனக் கூறியுள்ளார் ஸ்மித்.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட் குறித்த தனது பயத்தை பற்றி பேசியுள்ளார் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித். ஐபிஎல் போன்ற 20 ஓவர் போட்டிகள் உலக பிரபலமானதால், டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து சற்றே அச்சமடைவதாக தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித்.

அவர் கூறுகையில், “உலகளவில் ஐபிஎல் போன்ற போட்டிகள் புகழ்பெற்றுள்ளதால், டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுகிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அழிவு இல்லை. தற்போது நல்ல நிலையில் தான் உள்ளது. சமீபத்தில் நாம் பார்த்த சில போட்டிகளும் அற்புதமாக இருந்தன.

கிரிக்கெட் வாரியங்களின் எண்ணங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் இருக்கும் வரை போட்டியும் உயிருடன் இருக்கும் என நம்புகிறேன்.” என்றார் ஸ்மித்

ஐபிஎல் போன்ற லிமிட்டட் ஓவர்கள் இருக்கும் போட்டிகள் தான் தற்போது அதிக பிரபலமாக உள்ளதால், சிறிய நாடுகள் டெஸ்ட் கிரிக்கெட் (5 நாட்கள் நடைபெரும் நீண்ட போட்டியை) அவ்வளவாக விளையாடுவதில்லை.

இந்தியா, இங்கிலாந்து போன்ற கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள் மட்டுமே மீண்டும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதால் இந்த பயம் எழுகிறது என்கிறது கிரிக்கெட் வட்டாரம்.

முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து அணியுடன் மோதியது இந்தியா. இதில் நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?