23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆறாவது முறையாக ஆசியக் கோப்பையை கைப்பற்றியுள்ளது இலங்கை அணி.
கடந்த மாதம் துவங்கிய ஆசியக் கோப்பை டி20 போட்டிகளின் இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. துபாயில் நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கை, பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த இலங்கை அணிக்கு துவக்க வீரர்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை. சொற்ப ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கைக்கு பனுகா ராஜபக்ச மற்றும் வனிந்து ஹசரங்கா ஜோடி இணைந்து, ஸ்கோரை உயர்த்தினர்.
20 ஓவர்கள் முடிவில் 170 ரன் எடுத்திருந்தது இலங்கை. அதிகபட்சமாக ராஜபக்ச 45 ரன்கள் எடுத்திருந்தார். பாகிஸ்தான் அணியின் ஹரிப் ரவுப் 3 விக்கெட்கள் எடுத்திருந்தார்.
171என்ற இலக்கை நோக்கி விளையாட துவங்கியது பாகிஸ்தான் அணி. ஆரம்பத்திலிருந்தே தடுமாறிய பாகிஸ்தான் பேட்டர்கள் உடனுக்குடன் இலங்கை பந்துவீச்சில் சரிய, ரிஸ்வான் மட்டும் 55 ரன் எடுத்திருந்தார். இருப்பினும் கோப்பையை தவற விட்டது. இறுதியில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வென்றது.
இதன் மூலம் ஆறாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்றுள்ளது இலங்கை அணி. இலங்கை அணியின் வெற்றியை கொழும்பு நகர வீதிகளில் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். பொருளாதார நெருக்கடி, பெருந்தலைவர்கள் பதவி விலகல் ஆகிய பிரச்னைகளால் சூழ்திருந்த இலங்கைக்கு, ஆசியக் கோப்பை வெற்றி ஆறுதலாக அமைந்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust