தோனி: ”எனக்கு farewell தருகிறார்கள்” எங்கு நோக்கினும் Yellow Jersey- ஓய்வு பெறுகிறாரா தல?  ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

தோனி: ”எனக்கு farewell தருகிறார்கள்” எங்கு நோக்கினும் Yellow Jersey- ஓய்வு பெறுகிறாரா தல?

“ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி. நிறைய பேர் வந்திருந்தனர். என்னை வழியனுப்பி வைக்க தான் இவர்கள் மஞ்சள் நிற உடையில் வந்திருக்கிறார்கள், அதற்கு நன்றி. அடுத்த முறை இவர்களில் பலரும் கொல்கத்தா ஜெர்சி அணிந்து வருவார்கள்” என்றார்.

Keerthanaa R

ஐபிஎல் 2023ன் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. பத்து புள்ளிகளுடன் தற்போது சிஎஸ்கே முதலிடத்தில் இருக்கிறது.

போட்டி முடிந்து பேசிய சென்னை அணி கேப்டன் தோனி, தனது ஓய்வு குறித்து மீண்டும் சூசகமாக பேசியது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்த கொல்கத்தா அணிக்கு, 236 என்ற் இமாலய இலக்கை சென்னை அணி நிர்ணையிக்கும் என்ற எண்ணமே இருந்திருக்காது.

எனக்கு இன்னொரு முகம் இருக்கு!

ருதுராஜ் கெய்க்வாட் தன் பங்கிற்கு 35 ரன் சேர்க்க, தொடர்ந்து தனது மூன்றாவது அரைசதத்தை பதிவு செய்தார் கான்வே. அவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரஹானே, கொல்கத்தா அணி தன்னை முழுமையாக பயன்படுத்தவில்லை என்ற காட்டமோ என்னமோ, வந்த நொடி முதலே அதிரடியாக விளையாட, 5 சிக்சர்கள், 6 பௌண்டரிகள் உட்பட 71 ரன்கள் குவித்தார்.

”எனது பெஸ்ட்டை இன்னும் நான் வெளிகாட்டவில்லை” என்ற பன்ச் டயலாக் வேறு!

ஷிவம் தூபேவும் அரைசதம் பதிவு செய்ய, சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 235 ரன்கள் குவித்தது. இதுவே இந்த பருவத்தின் தற்போதைய ஹை ஸ்கோர்

தவறை திருத்திக்கொள்ளவில்லை

தங்கள் வசமும் பவர் ஹிட்டர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சரிந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள், இம்பாக்ட் பிளேயர்கள் உள்பட சென்னை அணி பந்துவீச்சில் தடுமாறி வெளியேறினர்.

அதிக பட்சமாக ஜேசன் ராய் 61 ரன்களும், ரிங்கு சிங் 53 ரன்களும் எடுத்திருந்த நிலையில், கொல்கத்தா 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

போட்டி முடிந்து பேசிய கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ரானா, “இதை ஜீரணித்துகொள்ள கடினமாக உள்ளது. இவ்வளவு பெரிய அணியுடன் மோதி 236 ரன்களை எடுக்கவேண்டும் என்பது அழுத்தத்தை தரவல்லது தான். எங்களது தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிக்கவில்லை என்றால், தோற்றுக்கொண்டு தான் இருக்க போகிறோம். அதனால், அதனை சரி செய்ய வேண்டும்” என்றார்

என்னை வழியனுப்பி வைக்கிறார்கள்!

நேற்று நடந்த போட்டி, கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நடந்தது. ஆனால் இந்த விஷயம் அறிந்திடாதவர்களுக்கு மைதானம் சென்னை அணியின் ஹோம் கிரவுண்ட் என்று தான் தோன்றியிருக்கும். இது குறித்து தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் கூறியதாவது,

“ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி. நிறைய பேர் வந்திருந்தனர். என்னை வழியனுப்பி வைக்க தான் இவர்கள் மஞ்சள் நிற உடையில் வந்திருக்கிறார்கள், அதற்கு நன்றி. அடுத்த முறை இவர்களில் பலரும் கொல்கத்தா ஜெர்சி அணிந்து வருவார்கள்” என்றார்.

இதனை தொடர்ந்து தோனி தனது ஓய்வு குறித்து சூசகமாக பேசியுள்ளதாக ரசிகர்கள் , கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் கூறிவருகின்றனர். இதற்கு முன் ஹைதராபாத் அணியுடனான போட்டிக்கு பிறகும், தோனி, “எனது கடைசி நாட்களை நான் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

என்னதான் சேப்பாக்கம் மைதானம் தான் சென்னை அணிக்கு ஹோம் கிரவுண்ட் என்றாலும், மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, குஜராத் என சிஎஸ்கே அணி விளையாடிய அனைத்து அவே போட்டிகளிலும் மைதானம் மஞ்சள் நிறமாக காணப்பட்டது, உண்மையில் அவரது ஓய்வை யூகித்து தானோ என்னவ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?