Cristiano Ronaldo

 

Twitter

ஸ்போர்ட்ஸ்

தோனி, கோலியை வீழ்த்திய உலகின் டாப் 10 பணக்கார விளையாட்டு வீரர்கள் இவர்கள்தான்!

Newsensetn

உடற்பயிற்சியும், விளையாட்டும் அனைவருக்கும் அவசியம். மூன்றாம் உலக நாடுகளில் வாழ்வதற்கே வதைபடும் அவஸ்தைகளுக்கு மத்தியில் உடற்பயிற்சியும், விளையாடுவதற்கான இடமும் சாத்தியமில்லை. மேற்குலகில் அது அன்றாட வாழ்வின் அங்கமாக மாறியிருக்கிறது. உலகமயம் வந்த பிறகு விளையாட்டுகள் பெரும் வர்த்தகமாக மாறியிருக்கின்றன. கிரிக்கெட், தடகளம், கால்பந்து, அமெரிக்கன் புட்பால், கலவை மல்யுத்தம், குத்துச் சண்டை, டென்னிஸ், பாட்மிட்டன் என்று அனைத்து வகை விளையாட்டகளும் இன்று பல பில்லியன் டாலர் புரளும் வர்த்தகமாக மாறிவிட்டன.

கொஞ்சம் திறமையும், கொஞ்சம் அதிர்ஷடமும் இருந்து ஆடுகளத்தில் உங்களை நிரூபித்து விட்டால் பிறகு சில ஆண்டுகளில் நீங்கள் குறிப்பிட்ட விளையாட்டில் ஒரு நட்சத்திரம். தொழில் முறை நட்சத்திர விளையாட்டு வீரர்கள் களத்திலும், களத்திற்கு வெளியே விளம்பரங்களிலும் பெரும் வர்த்தக நிறுவனங்களைப்போல வருமானம் ஈட்டுகிறார்கள். ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பெரும் திறமை இருந்தாலும் அப்படி ஒரு வாய்ப்பு திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு கிடைத்து விடுவதில்லை. இங்கே 2021-ம் ஆண்டின் டாப் 10 பணக்கார விளையாட்டு வீரர்களைப் பார்ப்போம். இவர்கள் அனைவரும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஒரு சிலர் தென் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

Conor McGregor

1. கொனார் மெக்ரிகோர்

ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த கொனார், மிக்சட் மார்சியல் ஆர்ட்ஸ் எனப்படும் கலவை தற்காப்பு குத்துச் சண்டை வீரர் மற்றும் ஒரு தொழிலதிபர் ஆவார். 19 ஜூலை 2021 நிலவரப்படி, UFC லைட்வெயிட் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ளார். 2015 ஆம் ஆண்டில், UFC போட்டி ஒன்றில், அவர் நாக் அவுட் மூலம் ஜோஸ் ஆல்டோவை வெறும் 13 வினாடிகளில் தோற்கடித்தார், இது UFC டைட்டில் சண்டை வரலாற்றில் மிக விரைவான வெற்றியாகும். UFC வரலாற்றில் ஒரே நேரத்தில் இரண்டு எடைப் பிரிவுகளில் பட்டங்களைப் பெற்ற முதல் வீரர் ஆவார்.

2021-இல் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் படி உலகின் அதிக சம்பளம் வாங்கும் வீரராக தரவரிசைப்படுத்தப்பட்டார்.

போட்டி ஊதியம் மற்றும் விளம்பர வருமானம் 180 மில்லியன் டாலராகும்.

Lionel Messi

2. லியோனல் மெஸ்ஸி

மெஸ்ஸியைப் பற்றி அறிமுகம் தேவையில்லை. அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்து வீரர். ஐரோப்பிய கிளப்புகளில் விளையாடுவதோடு அர்ஜெண்டினா தேசிய அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். மரடோனாவே இவரை தனது வாரிசாக அறிவித்திருக்கிறார். எதிரணி வீரர்கள் மத்தியில் பந்தை குடைந்து கொண்டு விரைவாக கோல் அடிப்பதில் இவர் நிபுணர். பார்சிலோனா அணியில் நீண்டகாலம் விளையாடிவயர். 35 கோப்பைகளை வென்றிருக்கிறார். அவர் 2009 மற்றும் 2014 க்கு இடையில் ஐந்து ஆண்டுகள் உலகின் அதிக சம்பளம் வாங்கும் கால்பந்து வீரராக இருந்தார். 2021 ஆம் ஆண்டில் உலகின் முதல் 10 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் லியோனல் மெஸ்ஸி 2வது இடத்தில் உள்ளார்.

ஊதியம் மற்றும் விளம்பர வருமானம் 130 மில்லியன் டாலர்கள்.

Cristiano Ronaldo

3. கிறிஸ்டியானோ ரொனால்டோ

கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு போர்த்துகீசிய தொழில்முறை கால்பந்து வீரர் ஆவார். போர்ச்சுகல் தேசிய அணியின் கேப்டனாகவும் விளையாடுகிறார். பல விருதுகளை வென்றுள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் கிளப்புகளுக்காக ஆடியவர். அதிகமான கோல் அடித்த வீரர்களில் இவரும் ஒருவர். அவர் இரண்டு லா லிகா பட்டங்கள், இரண்டு கோபா டெல் ரே, நான்கு சாம்பியன்ஸ் லீக் உட்பட மொத்தம் 15 கோப்பைகளை வென்றார்.

2021 ஆம் ஆண்டில் உலகின் முதல் 10 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 3வது இடத்தில் உள்ளார்.

ஊதியம் மற்றும் விளம்பர வருமானம் 120 மில்லியன் டாலர்கள்.

Dak Prescott

4. டாக் பிரெஸ்காட்

அமெரிக்காவைச் சேர்ந்தவர். அமெரிக்கன் ஃபுட்பால் எனப்படும் அமெரிக்க கால்பந்து விளையாட்டின் வீரர். கால்பந்து வேறு, அமெரிக்கன் கால்பந்து வேறு. இவர் டல்லாஸ் கவ்பாய்ஸ் அணிக்காக விளையாடுகிறார். அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக விளங்குகிறார். 2021 ஆம் ஆண்டில் உலகின் முதல் 10 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் அவர் 4 வது இடத்தில் உள்ளார்.

ஊதியம் மற்றும் விளம்பர வருமானம் 107.5 மில்லியன் டாலர்கள்.

லெப்ரான் ஜேம்ஸ்

5. லெப்ரான் ஜேம்ஸ்

அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து சங்கத்தின் (NBA) தொழிற்முறை கூடைப்பந்து விளையாட்டு வீரர். என்பிஏ-வின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக மதிப்பிடப்பட்டவர். அவரை முன்னாள் வீரரும் புகழ் பெற்ற மைக்கேல் ஜோர்டனுடன் ஒப்பிடுகிறார்கள். நான்கு என்பிஏ வெற்றிகள், இரண்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றவர். சிறந்த ஆட்டக்காரராக பலமுறை விருது வென்றவர்.

ஊதியம் மற்றும் விளம்பர வருமானம் 96.5 மில்லியன் டாலர்கள்.

நெய்மர்

6. நெய்மர்

இளைஞர்களிடையே புகழ்பெற்ற நெய்மர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த தொழிற்முறை கால்பந்து ஆட்டக்காரர். பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் கிளப் மற்றும் பிரேசில் தேசிய அணிக்காக விளையாடுகிறார். உலகின் தலை சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இரு முறை தென் அமெரிக்காவின் கால்பந்து வீரர் பட்டங்களை வென்றிருக்கிறார். திறமை மற்றும் பொழுதுபோக்கு இரண்டு அம்சங்களிலும் அவர் ஒரு சிறந்த வீரர்.

ஊதியம் மற்றும் விளம்பர வருமானம் 95 மில்லியன் டாலர்கள்.

ரோஜர் பெடரர்

7. ரோஜர் பெடரர்

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த தொழிற்முறை டென்னீஸ் வீரர். ஏடிபி தரவரிசையில் 9 வது வீரராக தற்போது இருக்கிறார். அவர் 20 ஆண்கள் ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை வென்றிருக்கிறார். அவர் ஏடிபி ரேங்கில் முதல் வீரராக மொத்தம் 310 வாரங்கள் இருந்திருக்கிறார். இது ஒரு சாதனையாகும்.

ஊதியம் மற்றும் விளம்பர வருமானம் 90 மில்லியன் டாலர்கள்.

லூயிஸ் ஹாமில்டன்

8. லூயிஸ் ஹாமில்டன்

லூயிஸ் ஹாமில்டன் பிரிட்டீஷ் நாட்டைச் சேர்ந்த பந்தயக் கார் ஓட்டுநர் ஆவார். தற்போது மெர்சிடஸ் அணிக்காக ஃபார்முலா ஒன் போட்டியில் பங்கேற்கிறார். இப்போட்டியில் இவர் ஏழு உலக ஓட்டுநர் சாம்பியன் பட்டங்களை வென்றிருக்கிறார். இது ஜெர்மனியின் மைக்கேல் ஷூமேக்கரின் சாதனைக்கு இணையானது. 2014, 2015ம் ஆண்டில் மெர்சிடஸ் அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். அதே போன்று 2019. 2020ம் ஆண்டிலும் வென்றிருக்கிறார். அமெரிக்காவின் டைம் பத்திரிகை உலகின் செல்வாக்கு படைத்த 100 நபர்களில் ஒருவரதாக ஹாமில்டனை 2020-ம் ஆண்டு தெரிவு செய்தது.

ஊதியம் மற்றும் விளம்பர வருமானம் 82 மில்லியன் டாலர்கள்.

டாம் பிராடி

9. டாம் பிராடி

டாம் பிராடி அமெரிக்க கால்பந்து விளையாட்டின் புகழ்பெற்ற வீரர் ஆவார். இந்த விளையாட்டில் குவார்ட்டர் பேக் எனப்படும் நிலையில் இவர் அசாத்தியமாக விளையாடுவார். இவருக்கென்றே பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. இவரது அணிக்காக பல போட்டிகளில் வென்றுள்ளார்.

ஊதியம் மற்றும் விளம்பர வருமானம் 76மில்லியன் டாலர்கள்.

கெவின் டுராண்ட்

10. கெவின் டுராண்ட்

அமெரிக்காவின் கெவின் டுரான்ட் பிரபலமான தேசிய கூடைப்பந்து (பேஸ்கட்பால்) சங்கத்தின் விளையாட்டு வீரர் ஆவார். இவர் புரூக்ளின் நெட்ஸ் அணிக்காக ஆடுகிறார். அவர் இரண்டு என்பிஏ சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். அதே போன்று ஒரு முறை சிறந்த ஆட்டக்காரர் விருதையும் வென்றிருக்கிறார். மூன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களையும் வென்றிருக்கிறார். உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் கூடைப்பந்து வீரர்களில் டுராண்டும் ஒருவர். ஃபுட் லாக்கர் மற்றும் நைக் போன்ற பிராண்டுகள் இவரோடு விளம்பர ஒப்பந்தம் போட்டுள்ளன.

ஊதியம் மற்றும் விளம்பர வருமானம் 75 மில்லியன் டாலர்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?