"நாங்கள் Playoffsக்கு செல்ல தகுதியானவர்களே” - குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பேசியது என்ன? Twitter
ஸ்போர்ட்ஸ்

"நாங்கள் Playoffsக்கு செல்ல தகுதியானவர்களே” - குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பேசியது என்ன?

Keerthanaa R

ஐபிஎல் 2023ன் பிளே ஆஃப் சுற்றுக்குள் முதல் அணியாக முன்னேறியுள்ளனர் நடப்பு சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ் அணியினர்.

பிளே ஆஃபுக்கு செல்ல நாங்கள் தகுதியானவர்களே எனக் கூறியுள்ளார் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா.

கடந்த ஆண்டு அறிமுகமான இரண்டு புதிய அணிகளில் ஒன்று குஜராத் டைட்டன்ஸ். இவர்கள் தங்களின் முதல் சீசனிலேயே ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தினர்.

சொல்லப்போனால், இந்த குஜராத் அணி, இதுவரை ஐபிஎல்லில் வெவ்வேறு அணிகளில் இருந்த தலைச்சிறந்த வீரகளின் கூட்டணியாக இருக்கிறது. தனித்தனியாக மற்ற அணிகளில் இருந்து மிரட்டிய வீரகள் ஒன்று கூடி ஒரே அணியாக உருவெடுக்க முதல் சீசனிலேயே குஜராத்தின் கையோங்கியது.

முதல் சீசனில் கிடைத்த வெற்றிக்களிப்பு குறையாமல், அதே உத்வேகத்துடன் இந்த ஆண்டும் களமிறங்கிய அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை விடவே இல்லை. தற்போது 18 புள்ளிகள் பெற்று கெத்தாக பிளே ஆஃபுக்குள் முதல் அணியாக நுழைந்துவிட்டது.

நேற்றின் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் மோதியது குஜராத் அணி. முதலில் பேட்டிங் செய்து 188 ரன்கள் குவித்தது. இரண்டாவதாக களமிறங்கிய ஹைதராபாத் தட்டுத்தடுமாறியது.

கிளாசன் தவிர அனைத்து வீரர்களும் பத்துக்கும் குறைவான ரன்களில் வெளியேறினர். சன்ரைசர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இதனால், முதல் அணியாக குஜராத் அணி பிளே ஆஃபுக்கு முன்னேறியது. போட்டி முடிந்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா,

“எங்கள் அணியை நினைத்து பெருமையாக இருக்கிறது. இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை பிளே ஆஃபுக்கு முன்னேறியுள்ளோம். சவாலான தருணங்களில் ஒன்றிணைந்து அதனை எதிர்கொள்ள முன்வந்தனர். இந்த வெற்றிக்கு நாங்கள் தகுதியானவர்களே”

மேலும், “எங்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும், ஆனால் அணிக்குள் கவனம் செலுத்த விரும்பினோம். தவறுகள் செய்திருந்தாலும், பலவற்றை சரியாக செய்தோம், போட்டியை விட்டுக்கொடுக்காமல், சீராக விளையாட விரும்பினோம்” என்றார் பாண்டியா.

குஜராத் அணி சார்பில் சுப்மன் கில் சதமடித்திருந்தார். இது அவரது முதல் ஐபிஎல் சதம். தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சனின் அதிரடி பேட்டிங், மற்றும் ஷமியின் சிறப்பான ஸ்பெல் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

குஜராத் அணி தற்போது முன்னேறியுள்ள நிலையில், பிளே ஆஃபுக்கு தகுதி பெறும் அடுத்த மூன்று அணிகள் எது என இன்னும் முடிவாகவில்லை. சென்னை, மும்பை அணிகள் முறையே 15 மற்றும் 14 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர். லக்னோ 13 புள்ளிகளுடனும், பெங்களூரு, கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் 12 புள்ளிகளுடன் இருப்பதனால் இந்த குழப்பம்!

புற்றுநோயுடன் போராடுபவர்களுக்கு துணை நிற்கும் விதமாக நேற்றின் போட்டியில் லாவண்டர் நிற ஜெர்சியில் குஜராத் அணி விளையாடியது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?