உலக கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவுக்கு எதிராக எழுந்த பாலியல் வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக கால்பந்து ஜாம்பவானாக வலம் வருகிறார்.
இவர் மீது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் மயார்கோ என்ற பெண் பாலியல் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில், 2009-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்கு வந்திருந்த ரொனால்டோ ஹோட்டல் அறையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியிருந்தார்.
லாஸ் வேகாஸ் நகர நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்ட போது தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுப் பொய் என ரொனால்டோ மறுத்து வந்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ஜூன் 11-ந் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி.
இந்த வழக்கு குறித்து நீதிபதி ஜெனிஃபர் டோர்சி கூறியதாவது:
ரொனால்டோவுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முன்னுக்குப் பின் முரண்பாடானத் தகவலையே ஆரம்பத்திலிருந்து அளித்து வந்ததாக குறிப்பிட்டார்.
மேலும், இந்த வழக்கை இன்னும் தீவிரமாக மாற்றுவதற்காக மனுதாரரின் வழக்கறிஞர்கள் பொய்யான ஆவணங்களையும் ஜோடித்து நீதிமன்றத்தில் வழங்கி உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
இதுபோன்ற சட்டவிரோத செயல்களைத் தொடர்ந்து செய்ததால் இந்த வழக்கை நடத்துவதற்கான வாய்ப்பை மனுதாரர் இழந்துவிட்டார். எனவே அவரது மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp