தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் இன்று முடிவடைந்தன. இதில் தென்னாப்பிரிக்கா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த போட்டியின் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணிலேயே அந்த அணியை வெற்றிகொண்டது மேற்கிந்திய தீவுகள் அணி.
மேலும் இதனை அனுபவம் இல்லாத வீரர்களை வைத்தே சாதித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பெற்றிருந்த 11 வீரர்களில் 7 பேர் 10க்கும் குறைவான டெஸ்ட்-களில் மட்டுமே விளையாடி உள்ளனர்.
டேகனரின் சந்தர்பால் (9 டெஸ்ட்), கிர்க் மெக்கென்சி (2), அலிக் அத்தானாஸ் (3), கவேம் ஹாட்ஜ் (2), ஜஸ்டின் கிரீவ்ஸ் (1), கெவின் சின்க்ளேர் (அறிமுகம்), ஷமர் ஜோசப் (1)
குறிப்பாக ஷமர் ஜோசப் முதல் போட்டியிலேயே அபாரமாக விளையாடியிருக்கிறார்.
பேட்டிங்கின்போது மிட்சல் ஸ்டார்க் வீசிய பந்தில் கால் விரலில் காயம் ஏற்பட்டு Retired hurt ஆகி வெளியேறியவர், பந்துவீச்சில் மாஸ் காட்டியுள்ளார்.
7 விக்கெட்களை எடுத்து, ஆஸ்திரேலியாவை நிலைகுலைய வைத்து மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார் இந்த இளம் வீரர்.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலை பெற்றது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust