ஏ. ஆர். ரகுமான் சந்தோஷ் நாராயணன்
தமிழ்நாடு

ஏ. ஆர். ரஹ்மான் பகிர்ந்த ‘தமிழணங்கு’ ஓவியம் யார் வரைந்தது தெரியுமா?

NewsSense Editorial Team

ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கூறியது கடும் விமர்சனத்திற்கு உள்ளான சூழலில், ஏ. ஆர். ரகுமான் ‘தமிழணங்கு' ஓவியத்தை பகிர்ந்திருந்தார்.

A R Rahman

ட்விட்டர் பதிவு

‘தமிழுக்கும் அமுதென்றுபேர்!’ என்ற பாரதிதாசனின் பாடலில் வரும் ‘தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!’ என்ற வரிகளை குறிப்பிட்டு இசையமைப்பாளர் ரகுமான் டிவிட்டர் பதிவு ஒன்றை பகிர்ந்து இருந்தார்.

அந்த ஓவியம் வைரலாக இப்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

அதாவது அமித்ஷாவிற்கான ஏ.ஆர். ரகுமானின் பதில் இது என்ற பொருளிலில் பலர் இதனை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் எக்காலமும் இந்திக்கு தலை வணங்காது. இது தமிழ் மண் என்று கூறி சிலர் இந்த ஓவியத்தை பகிர்ந்து வருகின்றனர்.

சரி… ஏ. ஆர். ரகுமான் பகிர்ந்த ஓவியத்தை வரைந்தது யார்?

‘கலைடாஸ்கோப் கலைஞன்’

இந்த ஓவியத்தை வரைந்தது ஓவியர் சந்தோஷ் நாராயணன்.

தன் மினிமலிச ஓவியங்கள் மூலம் தமிழகத்தில் பரவலான கவனத்தைப் பெற்றவர் ஓவியர் சந்தோஷ் நாராயணன் சென்னை கவின் கலை கல்லூரி மாணவர்.

அண்மையில் வெளியாகி விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த ரைட்டர் திரைப்படத்தின் இணை எழுத்தாளர்.

இவர் விகடனில் கலைடாஸ்கோப், அஞ்ஞ்சான சிறுகதைகள் உள்ளிட்ட தொடர்களை எழுதியவர்.

விகடன் தடம் இதழில் சிற்றழில் எனும் தொடரை எழுதியவர்.

இவர் சச்சினின் 100 செஞ்சுரிகளைக் கொண்டு வரைந்த புகைப்படம் சச்சினுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்த சச்சின் டெண்டுல்கர் அதன் நுணுக்கமான விஷயங்களைப் பாராட்டியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?