காவலர் மற்றும் சிறுமி

 

Facebook

தமிழ்நாடு

சென்னை: சாலையோரத்தில் வசிக்கும் மாணவிக்கு ஆசிரியரான போக்குவரத்து காவலர்

Antony Ajay R

சென்னை பிராட்வே பகுதியில் சாலையோரத்தில் வசித்து வரும் சிறுமிக்குக் கணக்கு பாடத்தில் வரும் சந்தேகங்களைத் தீர்க்க காவலர் உதவி வருவது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு காரணமாகக் குழந்தைகளின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் பலர் கல்வியை இடைநிறுத்தியிருக்கின்றனர். கடந்த ஆண்டில் திறக்கப்பட்ட பள்ளிகளும் ஒமிக்கிரான் பரவல் காரணமாக மூடப்பட்டுவிட்டது.

பள்ளிக்கு வர வேண்டாம் என நினைப்பவர்கள் ஆன்லைனில் கற்கலாம் என அரசு அறிவித்தது. ஆனால் ஆன்லைன் கல்வி செல்வந்தர்களுக்கு, அல்லது நடுத்தர வகுப்பினருக்கு மட்டுமே சாத்தியம். வசிக்க வீடு கூட இல்லாத சிறுமி கல்வி கற்பது எப்படிச் சாத்தியமாகும்?

காவலர் மற்றும் சிறுமி

கடந்த ஓராண்டுக் காலமாகப் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் 7-ம் வகுப்பு சிறுமி, கல்வியை விட்டுவிடாமல் கெட்டியாகப் பிடித்துள்ளார். எல்லாப் பாடங்களையும் படித்துவிட முடிந்த அவருக்குக் கணிதத்தில் ஏற்படும் குழப்பங்கள் பெரிய பிரச்சனையாக இருந்தது. அவற்றைத் தீர்க்க உதவி செய்துள்ளார் போக்குவரத்து காவலர் மகேந்திரா!

ஏதோ ஒரு நாள் இரண்டு நாட்கள் என்றில்லாமல் கிட்டத் தட்ட ஓராண்டுக் காலமாக அந்த சாலையோர சிறுமிக்குக் கணக்கு வாத்தியாராக இருக்கிறார் காவலர் மகேந்திரா. காவல் துறை நண்பனாக மட்டும் இல்லாமல் ஆசிரியராகவும் இருக்கும் இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாக, நெட்டிசன்கள் காவலரையும் அவரிடம் கற்கும் மாணவியையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?