அதிமுக -திமுக

 

News Sense

தமிழ்நாடு

அதிமுக - பாஜக கூட்டணி பிரிவு, நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் பாஜக

தனித்துப் போட்டியிடுவதனை அறிவித்த அண்ணாமலை “ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுக தலைவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம். எங்களது கூட்டணி முறியவில்லை. 2024 தேர்தலில் ஒன்றாகவே பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம்” எனக் கூறியுள்ளார்.

Antony Ajay R

பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அந்த கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.

முன்னதாக நடைபெற்ற 9 மாவட்ட தேர்தலை இரண்டு கட்சிகளும் இணைந்து சந்தித்த நிலையில், கூட்டணியோடு உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்பதில் குழப்பங்கள் இருப்பதனால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிமுக-வுடன் நடத்தப்பட்ட முதல் கட்ட பேச்சு வார்த்தையில் 10% இடங்களைத் தருவதாக அவர்கள் குறிப்பிட்டதாகவும் பாஜக பல அதிக தலைவர்களை நிறுத்த வேண்டும் என்பதனால் அவர்களுடன் ஒத்துப்போக முடியவில்லை எனவும் செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

பேச்சு வார்த்தை

இந்திய அளவில் எல்லா மாநிலங்களிலும் பாஜக உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே போட்டியிடுவது வழக்கம். அதன் படி இந்த தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் தனித்துப் போட்டியிடுவதையே தொண்டர்கள் விரும்புவதாகவும், தொண்டர்களின் குரலுக்குச் செவி சாய்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.

அதிமுக-வுக்கு லாபமா? நட்டமா?

தனித்துப் போட்டியிடுவதனை அறிவித்த அண்ணாமலை “ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுக தலைவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம். எங்களது கூட்டணி முறியவில்லை. 2024 தேர்தலில் ஒன்றாகவே பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம்” எனக் கூறியுள்ளார்.

அண்ணாமலை

“சட்டமன்ற தேர்தலில் 1கோடியே 40 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ள அதிமுக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது எந்த வகையிலும் பின்னடைவாக இருக்காது” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரிய தலைவர்களை விட அடிமட்ட தலைவர்களின் கை ஓங்கியிருக்கும். கட்சித் தலைமைகள் அவர்களுடன் இணங்கி செல்ல வேண்டியது அவசியம். “அதிமுக - பாஜக கூட்டணியில் தலைவர்களுக்கு இடையில் புரிதல் இருந்தாலும் தொண்டர்களுக்கு மத்தியில் சுமுகமான உறவு இல்லை” என பாஜக அண்ணாமலையே கூறியிருக்கிறார். தனிதனியாக தேர்தலை எதிர்கொள்வது இரண்டு கட்சிகளுக்கும் நிர்ப்பந்திக்கப்பட்ட முடிவாகவே இருக்கிறது. யாருக்கு லாபமாக அல்லது நட்டமாக அமையும் என்பதை மக்கள் தான் கூற வேண்டும்.

திமுக - அதிமுக - பாஜக என்ற முக்கோண தேர்தல் போட்டி ஒவ்வொரு கட்சிக்கும் சவால் நிறைந்ததாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருக்கும்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?