அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 52 பேர் காயம்! Twitter
தமிழ்நாடு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார் கார்த்தி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் வழங்கப்படும் காரை பரிசாக வென்றார் கருப்பாயூரணி கார்த்தி

Priyadharshini R

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

உறுதிமொழியுடன் தொடங்கியது உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் சுற்று நிறைவு!

அதிகபட்சமாக 2 மாடுகள் பிடித்த சரவணகுமார், ஒருவர் மட்டுமே 2ம் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்

தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படுகிறது

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெறும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படம் பதித்த ஒரு சவரன் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படுகிறது

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வந்த நடிகர் அருண் விஜய்

சீறும் காளைகளை அடக்கி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பரிசுகளை பெறும் மாடு பிடி வீரர்கள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னிலை நிலவரம்!

அபிசித்தர் - 08

சிவசரேன் -04

பாலமுருகன் - 02

1200 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ள நிலையில், 2 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னிலை நிலவரம்!

அபிசித்தர் - 11

பாலமுருகன் - 07

சிவசரேன் -06

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் 4வது சுற்று நிறைவு

அபிசித்தர் - 11

பாலமுருகன் - 07

சிவசரேன் -06

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வந்த நடிகர் சூரி மற்றும் ஊடகவியலாளர் கோபிநாத்

வாடிவாசலில் இருந்து சீறிய அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காளை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் இதுவரை 24 மாடுபிடி வீரர்கள், 9 மாடு உரிமையாளர்கள், 15 பார்வையாளர்கள், 3 காவலர்கள் உட்பட 52 பேர் காயமடைந்துள்ளனர்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - 8வது சுற்று நிறைவு

அபிசித்தர் - 11

கார்த்தி -11

திவாகர் -11

பாலமுருகன் - 07

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை வரும் 24ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி நிசான் மேக்னைட் காரை பரிசாக வென்ற கருப்பாயூரணி கார்த்தி

 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் வழங்கப்படும் காரை பரிசாக வென்ற கருப்பாயூரணி கார்த்தி

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு!

கருப்பாயூரணி கார்த்தி 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து கார் பரிசு வென்றார்

கடந்தாண்டு முதலிடம் பிடித்த பூவந்தி அபிசித்தர், 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடம்

குன்னத்தூர் திவாகரன் 12 காளைகளை அடக்கி மூன்றாம் இடம்

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?