ஆனந்த் மஹிந்திரா Twitter
தமிழ்நாடு

பொன்னியின் செல்வன்: "சோழர் வரலாற்றை தெரிந்துகொள்ள தவறிவிட்டேன்" ஆனந்த் மஹிந்திரா வருத்தம்

Keerthanaa R

காலத்தை விஞ்சிய சோழர்களின் வரலாற்றை அறியாமலேயே விட்டுவிட்டேன் என டிவிட்டரில் வருத்தம் தெரிவித்திருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் படமாக்கப்படுகிறது என்ற செய்தி வந்ததிலிருந்து, சோழர்களை பற்றிய பேச்சும், அவர்களது வரலாறும், அவர்கள் எழுப்பிய வரலாற்று சின்னங்கள் குறித்த விவாதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பொன்னியின் செல்வன்

கடந்த செப்டம்பர் 30 அன்று மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. தமிழ் அல்லாத மற்ற மொழி மக்கள், எல்லா தட்டு ரசிகர்கள் என படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், மஹிந்திரா குழும நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் அவர், சோழர்களின் வரலாறு குறித்து தான் தெரிந்துகொள்ள தவறிவிட்டதாக கூறியிருக்கிறார்.

" ஆங்கிலேயர்களின் வரலாறு அதிகமாக கற்பிக்கப்பட்ட தலைமுறையை சேர்ந்தவனாக நான் இருப்பது வருத்தமளிக்கிறது. இந்த நம்பமுடியாத சாம்ராஜ்யத்தை இன்னும் நிறைய தரவு மற்றும் தகவல்களுடன் வெளிவரவுள்ள திரைப்படம் மூலம் தெரிந்துகொள்ள காத்திருக்கிறேன்" என ட்வீட் செய்திருந்தார்.

இதனை ரீட்வீட் செய்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா, "எனில் வெளியாகவிருக்கும் எங்கள் திரைப்படமான பொன்னியின் செல்வன் 1 ஐ நீங்கள் விரும்புவீர்கள் என நம்புகிறோம்" என பதிவிட்டிருந்தது" மேலும் அவருக்கு படத்தின் க்ளிம்ப்ஸை காண யூடியூப் லின்க்கையும் பகிர்ந்திருந்தது.

கடந்த செப்டம்பர் 14 அன்று ராஜ ராஜ சோழன் எழுப்பிய தஞ்சை பெரிய கோவில் குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்த ஆனந்த் மஹிந்திரா, " சோழ சாம்ராஜ்யம் எவ்வளவு திறமையானது, சக்திவாய்ந்தது மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியதை நாம் உண்மையில் உள்வாங்கிக் கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன்.

அதன் வரலாற்று முக்கியத்துவத்தை உலகின் பிற பகுதிகளுக்கும் நாம் போதுமான அளவு தெரிவிக்கவில்லை." எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?