பேரறிஞர் அண்ணா Twitter
தமிழ்நாடு

பேரறிஞர் அண்ணா தம்பிகளுக்குச் சொன்ன 20 பொன் மொழிகள்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான அண்ணா துரை சிறந்த மேடைப் பேச்சாளரும் எழுத்தாளரும் ஆவார். அவர் சிறந்த நாடக நடிகர் என்பதும் பலருக்கு தெரியாது. திராவிட கட்சிகளின் அடித்தளமாக இருந்த அவரின் சில பொன் மொழிகளைக் காணலாம்.

Antony Ajay R
  • போட்டியும் பொறாமையும் பொய் சிரிப்பும் நிறைந்த இந்த உலகத்தில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருக்க கூடியது கல்வி மட்டுமே.

  • பழமை புதுமை என்ற இரு சக்திகளுக்கும் போர் நடக்கிறது. எழுத்தாளர்களின் பேனா முனைகளே அப்போரில் உபயோகமாகும் போர்க் கருவிகள்.

  • எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டாலும் அவமானங்களுக்கு ஆளாக்கப்பட்டாலும் எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற திடமான கொள்கையும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும்.

  • ஓராயிரம் ஆபத்துக்கள் ஓயாமல் நம்மை நோக்கி வந்தாலும், நம் உள்ளம் உண்மை என்று உணர்ந்ததை உரைக்க அஞ்சுபவன் கோழை மட்டுமல்ல நாட்டுத் துரோகி.

  • ஆளப்பிறந்தவன் ஆண்மகன். அவன் இஷ்டத்துக்கு ஆடிப் பிழைக்க வேண்டியவள் பெண் மகள் இப்படிப் பேசிடும் பண்பு படைத்தது இந்து மதம். இந்த இந்து மதத்தை நம்பிக் கிடக்கும் நாடு உருப்படாது.

  • நான் எப்போதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன்.

  • ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.

  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொண்டால் மட்டும் போதாது, தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.

  • சிறந்த வரலாறுகளைப் படித்தால் தான் இளம் மனதில் புது முறுக்கு ஏற்படும்.

  • நாள், நட்சத்திரம், சகுனம், சாஸ்திரம் அத்தனையும் மனித முயற்சிக்கு போடப்படுகிற தடை கற்கள்.

  • தன்னை வென்றவன் தரணியை வெல்வான்.

  • பகைவர்கள் தாக்கி தாக்கி தங்கள் பலத்தை இழக்கட்டும்.. நீங்கள் தாங்கி தாங்கி பலத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

  • எவ்வளவு கட்டிடங்கள் கட்டினாலும், விஞ்ஞான கூடங்கள் அமைத்தாலும், புது பூங்கா அமைத்தாலும் கல்விச் செல்வம் இல்லாவிடில் அவை பயன்தராது.

  • பாடத்திட்டங்களில் பகுத்தறிவைப் புகுத்தும் தீவிரமான திட்டம் உருவாக்கப்படாத வரையில் பகுத்தறிவு வளராது நம் நிலையும் உயராது.

  • விதியை நம்பி மதியை பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாய் வாழ்வது மிக மிக தீங்கு.

  • சமூக புரட்சி பணியில் ஈடுபட்டவர்களுடைய வாழ்க்கை துன்பமானது தான். ஆனால் அவர்களது பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.

  • வாழ்க்கை ஒரு பாறை, உங்களிடம் அறிவு என்ற உளி இருக்கிறது. அதை அழகான சிற்பமாக வடித்து ரசியுங்கள்.

  • பாடத்திட்டத்தில் பகுத்தறிவை புகுத்தினால் தான் மக்களுக்கு பழமையிடத்திலுள்ள பாசம் குறையும், மனதில் உள்ள மாசு நீங்கும், காலத்திற்குத் தக்கது போல கருத்து வளரும்.

  • புகழ் தான் நம்மை தேடி வர வேண்டும்… புகழை தேடி நாம் அலையக் கூடாது.

  • நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.. இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?