Balaji wife nithya to join in BJP  Twitter
தமிழ்நாடு

”பெண்களை பாதுகாக்க பாஜகவில் இணைய போகிறேன்”- தாடி பாலாஜி மனைவி நித்யா பரபரப்பு பேட்டி

ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, தமிழிசை சவுந்தரராஜன் போன்ற பெண்கள் அரசியலில் சாதனைப்படைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நான் முன்னுதாரணமாக எடுத்து கொண்டு நாட்டுக்கு சேவையாற்ற பாஜகவில் இணைய உள்ளேன் என்றார்.

Priyadharshini R

தமிழ் சினிமாவில் காமெடியனாக நடித்து பிரபலமானவர் தாடி பாலாஜி. இவருடைய மனைவி நித்யா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனிதனியே வசித்து வருகின்றனர்.

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக, தொகுப்பாளராக இருந்து வந்த தாடி பாலாஜிக்கு பிக் பாஸ் 2வது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அதே சீசனில் நித்யாவும் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சி மூலம் இருவரும் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சிக்கு பிறகும் பாலாஜி - நித்யா இடையே பிரச்னை இருந்து கொண்டு தான் உள்ளது.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நித்யா அவ்வப்போது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நித்யா மீது வழக்குப் பதிவு:

சமீபத்தில் நித்யா மீது மாதவரம் காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டது.

சென்னையை அடுத்த மாதவரத்தில் நித்யா வசித்து வருகிறார். இவருக்கும் எதிர் வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கும் அடிக்கடி பிரச்னை இருந்துள்ளது.

இதனால் தனது காரை நித்யா கற்கள் வீசி சேதப்படுத்தியதாக ஓய்வு பெற்ற ஆசிரியர் மாதவரம் காவல் நிலையத்தில் நித்யா மீது புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நித்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியானது.

நித்யா விளக்கம் என்ன?

இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தார் நித்யா. அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார்.

தான் அவ்வாறு கார் மீது கற்களை வீசவில்லை என்றும் துணிவு படம் முடித்துவிட்டு வரும் போது என்னுடைய சாவியை தேடினேன். அவர்கள் கொடுத்த சிசிடிவி ஃபுட்டேஜில் அவ்வாறு இருக்காது என்றார்.

பாஜகவில் இணைய உள்ளேன்

ஒரு பெண்ணால் எல்லா துறையிலும் சாதிக்க முடியும். என்னதான் சிங்கிள் பெண்ணாக இருந்து போராடினாலும், நமக்கு பின்னாடி நிறைய தலைப்புகள் வைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, தமிழிசை சவுந்தரராஜன் போன்ற பெண்கள் அரசியலில் சாதனைப்படைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நான் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்கிறேன். நாட்டுக்கு சேவையாற்ற நான் பாஜகவில் இணைய உள்ளேன் என்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?