சென்னையில் ஷாப்பிங் செய்ய இத்தனை இடங்கள் இருக்கா? எங்கு என்ன வாங்கலாம்? Twitter
தமிழ்நாடு

சென்னையில் ஷாப்பிங் செய்ய இத்தனை இடங்கள் இருக்கா? எங்கு என்ன வாங்கலாம்?

சென்னையில் ஷாப்பிங் செய்ய தி.நகர் மட்டும் தான் இருக்கிறது என்றால் இல்லவே இல்லை. திரும்பும் இடமெல்லாம் ஷாப்பிங் செய்ய கடைகள் நிரம்பி வழியும் சென்னையின் முக்கிய இடங்கள் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

Priyadharshini R

சென்னைவாசிகளுக்கு ஷாப்பிங் என்றவுடன் நினைவிற்கு வருவது தி.நகர் தான். பண்டிகை நாட்களில் மட்டுமில்லாமல் எல்லா நாட்களிலும் மக்கள் கூட்டம் இங்கு அலைமோதும்.

துணிமணி முதல் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வரை எல்லாம் பொருட்களும் இங்கு வாங்கலாம், குறிப்பாக குறைந்த விலையில் ஷாப்பிங் செய்யலாம்.

ஆனால் சென்னையில் ஷாப்பிங் செய்ய தி.நகர் மட்டும் தான் இருக்கிறது என்றால் இல்லவே இல்லை. திரும்பும் இடமெல்லாம் ஷாப்பிங் செய்ய கடைகள் நிரம்பி வழியும் சென்னையின் முக்கிய இடங்கள் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

தி.நகர்

ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் இல்லாமல் ஒரு நாள் கூட இல்லை. இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை, அதுவும் மிகக்குறைந்த விலையில் இங்கு பொருட்கள் விற்கப்படுவதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பாண்டிபஜார்

தி.நகருக்கு அடுத்ததாக இருக்கும் சவுந்தரபாண்டியனார் அங்காடி என அழைக்கப்படும் பாண்டிபஜார் ஷாப்பிங் செய்ய சூப்பர் இடம். சென்னையில் ஒரு முக்கியமான வணிக இடமாக உள்ளது.

மயிலாப்பூர்

தி.நகர் போல மயிலாப்பூரிலும் சாலையோர கடைகள் ஏராளம் உள்ளன.

மயிலாப்பூரின் முக்கியமான ஸ்பாட் கபாலீஸ்வரர் கோவில் தான் என்றாலும், அந்த பகுதியில் விற்கப்படும் உணவுகளுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இந்த உணவுக்காகவே பல மைல் தூரம் ட்ராவல் செய்து வந்து சாப்பிட்டு செல்பவர்களும் உண்டு.

வண்ணாரப்பேட்டை

தி.நகரில் எப்படியோ அதே போல் வண்ணாரப்பேட்டையிலும் துணிக்கடைகளுக்கு பஞ்சமே இல்லை. இங்கு மொத்த விற்பனை கடைகள் அதிகமாக இருப்பதனால் மக்கள் கூட்டம் இங்கு கூடுகிறது.

சவுகார்பேட்டை

சவுகார்பேட்டையிலும் நீங்கள் விரும்பிய துணிகளை ஷாப்பிங் செய்யலாம். இந்த சந்தையில் வட இந்திய பாணி ஃபேஷன், குறிப்பாக துப்பட்டாக்கள் மற்றும் லெஹெங்காக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ரிச்சி ஸ்ட்ரீட்

ரிச்சி தெரு, சென்னையின் பழமையான சந்தைகளில் ஒன்றாகும். மொபைல் போன்கள், கம்ப்யூட்டர்கள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் இசைக் கருவிகள் போன்ற அனைத்து வகையான எலக்ட்ரானிக் பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கும். இந்த இடம் கேட்ஜெட் பிரியர்களுக்கு சொர்க்கமாக இருக்கிறது.

பர்மா பஜார்

சென்னையில் ஷாப்பிங் செய்ய மற்றொரு சூப்பர் இடம் என்றால் அது பர்மா பஜார். இங்குள்ள கடைகள் வாசனை திரவியங்கள், கேஜெட்டுகள், பிளாஸ்டிக் பொருட்கள், துணிகள் போன்றவற்றை விற்பனை செய்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?