செங்கல்பட்டு இரட்டை படுகொலை

 

facebook

தமிழ்நாடு

செங்கல்பட்டு இரட்டை படுகொலை: தினேஷ், மொய்தீன் எண்கவுன்டர் - போலீஸ் கூறுவது என்ன?

Antony Ajay R

செங்கல்பட்டு கே.கே தெரு பகுதியைச் சேர்ந்த அப்பு கார்த்திக்(30) என்னும் நபர் நேற்று பேருந்து நிலையம் அருகில் உள்ள காவல் நிலையத்துக்குச் சென்று விட்டு அருகிலிருந்த டீகடையில் டீ குடிக்க நின்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் நாட்டு வெடி குண்டுகளை கார்த்திக் மீது வீசியெறிந்து பின் அவரை கத்தியால் சரமாரியாகத் தாக்கினர். மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

அங்கிருந்து மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகனான காய்கறி வியாபாரி மகேஷ் (22)-ஐ தேடிச் சேர்ந்துள்ளனர். மகேஷையும் கொலைவெறியுடன் சரமாறியாக தாக்கிக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

கொலை நடந்த இடங்களிலிருந்து உடல்களைக் கைப்பற்றிய காவல்துறையினர். உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தினேஷ்மற்றும்மொய்தீன்

அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து இரு படுகொலைகளைச் செய்து நகரையே அச்சத்திற்குள்ளாக்கிய கொலை வழக்கைத் தீவிரமாக விசாரித்ததில் ஒரு பெண் உட்பட நான்கு பேருக்கு இந்த இரட்டை கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. நான்கு பேரையும் செங்கல் பட்டு காவல்துறையினர் தீவிரமாகத் தேடினர். இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்த காவல்துறையினர். பதுங்கியிருந்த மற்றவர்கள் குறித்து தகவல் அறிந்து, அவர்களைத் தேடிச் சென்று சரணடையும் படி கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் தப்பியோட முயற்சி செய்து காவலர்களை நாட்டு வெடிகுண்டு வீசி தாக்கவும், அறிவாளால் வெட்டவும் முற்பட்டிருக்கின்றனர். இதில் இரண்டு காவலர்கள் படுகாயமடைந்தனர். தற்காப்புக்காகக் காவலர்கள் சுட்டதில் இரண்டு பேரும் சுருண்டு விழுந்துள்ளனர். இருவரையும் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் போது இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு போலீஸார் கூறுகையில், ``உயிரிழந்த மொய்தீன், தினேஷ் ஆகியோரைப் பிடிக்க போலீஸார் சென்றபோது திடீரென அவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். அவர்களை சரண் அடையும்படி போலீஸார் எச்சரித்தனர். ஆனால் இருவரும் வெடிகுண்டுகளை வீசி தப்பிக்க முயன்றனர். உடனடியாக போலீஸார் தற்காப்புக்காக அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதில் இருவரும் உயிரிழந்துவிட்டனர். இந்தச் சம்பவத்தில் இரண்டு காவலர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட . தினேஷ், மொய்தீன் மீது கொலை உள்பட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் கொலைசெய்யப்பட்ட அப்பு என்கிற கார்த்திக், மகேஷ் ஆகியோருக்கும் என்கவுன்டரில் உயிரிழந்த தினேஷ், மொய்தீன் ஆகியோருக்கும் இடையே கடந்த 2018-ம் ஆண்டு முதல் முன்விரோதம் இருந்துவந்திருக்கிறது. அதன்காரணமாகத்தான் இந்தக் கொலை நடந்திருக்கிறது" என்றனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?