எவரெஸ்ட் சிகரம் தொட்ட தமிழர் - சென்னை இளைஞருக்கு குவியும் பாராட்டு! ட்விட்டர்
தமிழ்நாடு

எவரெஸ்ட் சிகரம் தொட்ட தமிழர் - சென்னை இளைஞருக்கு குவியும் பாராட்டு!

இதற்காக முதலில் சிறு சிறு சிகரங்கள் மீது ஏறி மலையேற்ற பயிற்சியை தொடங்கினார். அது படிப்படியாக 5000 மீட்டர் உயரமுள்ள சிகரங்களாக மாறின. மணாலி, சோலாங் மலைகள் மீது ஏறி, கடும் பனி, குளிரை தாங்கிக்கொள்ள பயிற்சிகள் மேற்கொண்டார். மலையின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க, சவால்களும் அதிகரித்தன.

Keerthanaa R
நான் உலகின் உச்சியில் இருப்பதாக நினைத்தேன். அந்த உணர்வை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அது என் வாழ்வின் மிகச் சிறந்த அனுபவம்
ராஜசேகர் பச்சை

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி சாதனை படைத்திருக்கிறார் சென்னையை சேர்ந்த ராஜசேகர் பச்சை என்ற 27 வயது இளைஞர். எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இரண்டாவது தமிழர் இவர் தான்.

இதற்கு முன் இந்திய ராணுவ வீரரான ஊட்டியை சேர்ந்த சிவகுமார் என்பவர் தான் எவரெஸ்ட் மலை ஏறிய முதல் தமிழர்.

கடந்த மே 19 ஆம் தேதி எவரெஸ்ட் மலையேறிய இவர், திங்களன்று சென்னை திரும்பிய நிலையில், இவரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்

சென்னை கோவளத்தை சேர்ந்தவர் ராஜசேகர் பச்சை. இவர் ஒரு அலைச்சறுக்கு வீரர் (surfing). சர்வதேச அளவில் அலைச்சறுக்கு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ள இவர், சர்ஃபிங் பயிற்சியாளராகவும் இருக்கிறார்.

ராஜசேகருக்கு மலையேற்றம் மீதும் ஆரவம் அதிகம். உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் (கடல் மட்டத்திலிருந்து 8848 மீ உயரம் ) மீது ஏற வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு.

இதற்காக முதலில் சிறு சிறு சிகரங்கள் மீது ஏறி மலையேற்ற பயிற்சியை தொடங்கினார். அது படிப்படியாக 5000 மீட்டர் உயரமுள்ள சிகரங்களாக மாறின. மணாலி, சோலாங் மலைகள் மீது ஏறி, கடும் பனி, குளிரை தாங்கிக்கொள்ள பயிற்சிகள் மேற்கொண்டார்

மலையின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க, சவால்களும் அதிகரித்தன

”வெப்பநிலை மைனஸ் 20 ஐ தொடும்போது, காலில் 5 அல்லது 6 கிலோ வரை எடையுள்ள ஷூக்களை அணிந்து மலையேறுவது எளிதான காரியமல்ல” என்கிறார் ராஜசேகர்.

எனினும், குடும்பத்தினரும், நண்பர்களும் தந்த ஊக்கம், இது கடினமான காரியம் என்றாலும் செய்து முடித்தாகவேண்டும் என்ற வைராக்கியமும் அவரை முன்னகர்த்தியுள்ளது.

சென்னை கோவளத்தில் வசிக்கும் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவன் நான். இதனால் சர்ஃபிங் செய்வது எனக்கு எளிது, ஏனென்றால் நான் கடலை பற்றி நன்கு அறிந்திருப்பேன் என எப்போதும் விமர்சனக்கள் வரும். சரி அப்படியென்றால், எனக்கு தெரியாத, வராத ஒரு விஷயத்தை செய்து காட்டி என்னை நிரூபிக்கவேண்டும் என நினைத்தேன்” என்கிறார்

சுமார் 9 மாதங்கள் கடும் பயிற்சிகள் மேற்கொண்டு கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி எவரெஸ்ட் மீது ஏறும் தன் பயணத்தை தொடங்கினார். 19 ஆம் தேதி மலையின் உச்சியை அடைந்தார்.

“ நான் உலகின் உச்சியில் இருப்பதாக நினைத்தேன். அந்த உணர்வை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அது என் வாழ்வின் மிகச் சிறந்த அனுபவம். நான் மலையேறும்போது என் கண் முன்னே 3 மரணங்களை பார்த்தேன். அதையும் மீறி இந்த சாதனையை படைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றார் ராஜசேகர்.

ராஜசேகர் பச்சைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?