யுவராஜ்

 

NewsSense

தமிழ்நாடு

கோகுல்ராஜ் கொலை வழக்கு : யுவராஜ் உள்ளிட்ட 11 பேர் குற்றவாளிகள்- நீதிமன்றம் உத்தரவு

Antony Ajay R

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். பொறியியல் கல்லூரி மாணவரான இவர், கடந்த 2015- ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டுக் கிடந்தார்.


பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்த சுவாதி என்ற கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த மாணவியைக் காதலித்ததால், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 11 பேர் மீது, திட்டமிட்டு ஆணவக்கொலை செய்து, உடலை ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

கோகுல்ராஜ்

கோகுல்ராஜ் - ஸ்வாதி

கோகுல்ராஜ் ஒரு பொறியியல் பட்டதாரி. படித்து முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்த சின்னஞ்சிறு இளைஞன். வேற்று சாதியைச் சேர்ந்த ஸ்வாதி என்ற பெண்ணை காதலித்த காதலித்த குற்றத்துக்காக தலைவேறு, உடல் வேறாகத் துண்டிக்கப்பட்டு ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டார்.

2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கோகுல்ராஜ் திடீரென மாயமானர். “கோயிலில் பேசிக்கொண்டிருந்தோம். யுவராஜ் உள்ளிட்ட சிலர் கோகுல்ராஜை இழுத்துச் சென்றனர்,” என்ற ஸ்வாதியின் புகாரையடுத்து கடத்தல் வழக்கைப் பதிவு செய்தது காவல்துறை. கடத்தல் வழக்குப் பதிவான அன்றே, ரயில் தண்டவாளத்தில் தலைவேறு, உடல் வேறாகக் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார் கோகுல்ராஜ்.

யுவராஜ்

போராட்டம்

கடத்தல் வழக்கைக் கொலை வழக்காக மாற்றவே கடும் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. கொலை வழக்காக மாற்றப்பட்ட பின்னர், முதல் குற்றவாளியான யுவராஜை கைது செய்யவும் பெரும் போராட்டம்.

வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, நீதிமன்றத்துக்கு வந்த பின்னர், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் செயல்படுவதாகப் புகார் எழுந்தது. அரசுத்தரப்பு வழக்கறிஞரை மாற்றவும் போராட்டம். இப்படிப் பல தடைகளைத் தாண்டி வழக்கு விசாரணை நடந்தது.

ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம்.

தீரன் சின்னமலைகவுண்டர் பேரவை எனும் பெயரில் சாதி அமைப்பை நடத்தி வந்த யுவராஜ் மீது அத்தனை குற்றச்சாட்டுகளும் நிரூபனம் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

இவர்களுக்கான தண்டனை வரும் 8ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது நீதிமன்றம்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?