திருச்சி சிவா Twitter
தமிழ்நாடு

சொன்னீர்கள் செய்தீர்களா? : மோடி ஆட்சி குறித்து கேள்வி எழுப்பிய திருச்சி சிவா

Govind

நாடாளுமன்றத்தில் விலை வாசி உயர்வு குறித்து இன்று திமுகவின் திருச்சி சிவா பேசினார். அவரது உரையின் சுருக்கம்:

2014இல் மோடி நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு குஜராத்தின் முதலமைச்சராக இருந்தார். அப்போதைய காங்கிரசு அரசை செயல்படாத அரசு என்றார். ஆனால் இவரது எட்டாண்டு ஆட்சியில் என்ன நடந்தது? வேலையின்மை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

நேற்று பேசும்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுகவை குற்றம் சாட்டினார். நாங்கள் மேடைக்கேற்றவாறு பேசுவதாகக் கூறினார். ஆனால் திமுக பதவியேற்று ஒருவருடத்திற்குள்ளேயே 70% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டது.

PM Modi

மோடியின் ஆட்சியில் பெண்களின் பிறப்பு விகிதம் அதிகரித்திருந்தாலும் அவர்களது சத்துக்குறைவு கடுமையாக அதிகரித்திருக்கிறது. பிரசவத்தின் போது மரணம் அதிகரித்திருக்கிறது.

குழந்தைகளின் சத்துக்குறைபாடும் அதிகரித்திருக்கிறது. இவையெல்லாம் புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மைகள். ஆனால் தமிழகத்தில் இவையெல்லாம் எதிர்மறையாக இருக்கின்றன. அங்கே மதிய சத்துணவு மட்டுமல்ல விரைவில் காலை உணவையும் பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுக்க இருக்கிறோம்.

Mk stalin

இப்படி திமுக அரசு ஸ்டாலின் தலைமையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. ஆனால் மோடி அரசு 2014 இல் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதா? கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்று சொன்னீர்களே ஒழித்தீர்களா? கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் போடுவோம் என்று சொன்னீர்களே செய்தீர்களா? உங்களது உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த தேர்தல் வாக்குறுதியை ஜூம்லா அதாவது சும்மா சொன்ன தேர்தல் வாக்குறுதி என்கிறார். இப்படி மக்களை ஏமாற்றி வருகிறீர்கள்.

வருடந்தோறும் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாக சொன்னீர்கள். ஆனால் தற்போது வேலையின்மைதான் அதிகரித்திருக்கிறது. பணமதிப்பழிப்பு மூலம் சிறு குறு நடுத்தர தொழில்களை அழித்தீர்கள். பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போது மோடி என்ன சொன்னார்? பணமதிப்பழிப்பு நடவடிக்கை 50 நாட்களுக்குள் எல்லாவற்றையும் சரியாக்கி விடும் இல்லையேல் என்னை தண்டியுங்கள் என்றார். ஆனால் பணமதிப்பழிப்பு பொருளாதாரத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் இன்னும் தொடர்கிறது.

GST

நீங்கள் அறிமுகப்படுத்திய ஜி.எஸ்.டியை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் விளைவாக விலைவாசி உயர்ந்திருக்கிறது. சுடுகாட்டிற்குக் கூட மோடி அரசு 18% ஜி.எஸ்.டி வரி போட்டிருக்கிறது. எவ்வளவு வருத்தத்திற்குரிய விசயம் இது? பெட்ரோல் விலையை எடுத்துக் கொள்ளுங்கள். காங்கிரஸ் ஆட்சியின் போது பெட்ரோல் விலை 2011இல் 58 ரூபாய் மட்டுமே இருந்தது. அப்போது உலகில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை மிக அதிகமாக இருந்தது. ஆனால் மோடி ஆட்சியில் உலக கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல் விலை அதிகரித்தது. தற்போது 104 ரூபாய் விற்கிறது. கடந்த 3 வருடங்களாக மத்திய அரசு பல லட்ச ரூபாய் வருமானத்தை பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் பெற்றிருக்கிறது.

கோவிட் பொது முடக்கத்தின் போது பலரும் வேலை வாய்ப்பை இழந்தனர், வருமானத்தை இழந்தனர். ஆனால் இதே காலத்தில் கார்ப்பரேட்டுகளின் லாபம் 22% அதிகரித்திருக்கிறது. இப்போது மக்களின் வாங்கும் சக்தி பல மடங்கு குறைந்திருக்கிறது. அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு குறைந்திருக்கிறது. இதுதான் உங்கள் அரசு சாதனை.

நாட்டில் 54% வரிதான் நேரடியாக வசூலிக்கப்படுகிறது. மீதம் 46% மறைமுக வரியாக சாதாரண மக்கள் கொடுக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளுக்கு வரிச் சலுகை, சாதாரண மக்களுக்கு வரிச்சுமை! சமையல் எரிவாயுவின் விலை 1100 ஐ தொட்டிருக்கிறது. பெண்கள் எப்படி வாழ முடியும். மக்கள் பட்டினியில் வாடுகிறார்கள்.

தற்போது பணத்தின் மதிப்பும் சரிந்திருக்கிறது. அந்நியச் செலாவணி இருப்பும் குறைந்திருக்கிறது. மொத்தத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு லாபம், சாதாரண மக்களுக்கு துயரம் இதுதான் உங்கள் அரசின் சாதனை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?