Elephant and cub Pexels
தமிழ்நாடு

குட்டி யானைக்கு Z செக்யூரிட்டி- இணையத்தை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய வீடியோ

Keerthanaa R

யானை பார்க்க பெரிதாக இருந்தாலும், அதன் சைகைகளும் நடவடிக்கைகளும் க்யூட்டாக இருப்பதாலேயே, மனிதர்களுக்கு பிடித்த விலங்குகளில் ஒன்றாக யானை உள்ளது.

பெரிய யானையோ, குட்டி யானையோ, அதன் வீடியோக்களில் அவை செய்யும் சேட்டைகளை அனைவரும் விரும்பி பார்ப்பார்கள்.


மனிதர்கள் கண்ணுக்கு நாய்குட்டி எப்படியோ, அப்படி தான் யானைகளின் கண்களுக்கு மனிதர்களை தெரிவார்களாம். இதனாலேயே, மனிதனுக்கும் யானைக்கும் உள்ள அன்னியோனியம் அதிகம்

Elephant and cub

கோவை சத்தியமங்கலம் ரோட்டில் ஒரு யானை கூட்டம் சாலையில் நடந்து செல்லும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. நான்கு பெரிய யானைகள் மற்றும் ஒரு குட்டியானை நடந்து காட்டுக்குள் செல்கின்றன.

அந்த ஒரு குட்டியானை கொஞ்சம் கூட வழித்தவறி சென்றுவிடாதபடி மற்ற நான்கு பெரிய யானைகளும், கவனமாகக் கூட்டி செல்கின்ற. முன்னால் இரண்டு யானைகளும் பின்னால் இரண்டு யானைகளும் நடுவில் அந்த குட்டியானையும் என படை நகர்கிறது.

சில நாட்களுக்கு முன் இணையத்தில் வைரலான இந்த வீடியோவை, தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஐ எஃப் எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா, யானைகளுக்கே உரித்தான இந்த பாதுகாப்பு குணாதிசயத்தை பற்றி வியக்கும் வண்ணம் தலைப்பிட்டு பகிர்ந்திருந்தார்.


"இந்த உலகில், யானைகளை தவிர வேறு யாராலும் பிறந்த குழந்தைக்கு சிறந்த பாதுகாப்பை வழங்க முடியாது. இது Z+++" என்று எழுதியிருந்த அவர், கோவை சத்தியமங்கலம் சாலையில் யானைகள் கடந்து செல்லும் இந்த காணொலி காட்சி பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இதனுடனே சுசாந்தா நந்தா பகிர்ந்த இன்னொரு வீடியோவில் , முதலில் மூன்று யானைகள் ஒரு குட்டியானை என கிளம்பும் படையுடன் இன்னும் ஒரு பெரிய யானையும், சற்று வளர்ந்த ஒரு குட்டியானையும் சேர்ந்துகொள்கிறது.


இதை "பாருங்கள் எவ்வளவு சீக்கிரமாக குட்டியை வழிநடத்த கூடுதல் படை கூடுகிறது. கண்கவர் காட்சி" என்று பதிவிட்டு பகிர்ந்திருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களும், "எவ்வளவு அற்புதமான விலங்குகள்", "விதிவிலக்கு" என்று யானைகளை பாராட்டியவண்ணம் உள்ளனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?