ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தபால் வாக்குகள் எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 74.79% வாக்குகள் பதிவாகி இருந்தது
தபால் வாக்குகள் எண்ணப்பட்டதை தொடர்ந்து, வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 160 தபால் வாக்குகள் பெற்று முன்னிலை; அதிமுக வேட்பாளர் தென்னரசு 60 தபால் வாக்குகள் பெற்றுள்ளார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை; கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார்” - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பெருமிதம்
ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை - திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் கொண்டாட்டம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்: 5வது சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சுமார் 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
“திமுக, காங்கிரஸ் அடங்கிய எங்கள் கூட்டணி, மக்களுக்கான கூட்டணி என மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர்”
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் திருச்சியில் பேட்டி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்: 4வது சுற்று வாக்கு எண்ணிக்கை வரை வேட்பாளர்கள் பெற்ற அதிகாரப்பூர்வ வாக்குகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்துவரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர்கள்!