ஈரோடு தேர்தல் : அதிமுக நிலை என்ன?  Twitter
தமிழ்நாடு

ஈரோடு தேர்தல் : அதிமுக நிலை என்ன?

NewsSense Editorial Team

''போகிற போக்கைப் பார்த்தா... அ.தி.மு.க. டெபாசிட்டை திரும்ப வாங்குமானுகூட தெரியல'' என்பதுதான் இன்று காலை 9 மணியிலிருந்து பேச்சாக இருக்கிறது. கடந்த பிப்ரவரி 27-ம் தேதியன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று (மார்ச் 2) காலை எட்டு மணியிலிருந்து நடந்து வருகிறது.

 
'அ.தி.மு.க-வுக்கு டெபாசிட் கூட கிடைக்கவிட மாட்டோம்' தேர்தல் பிரசாரத்தின்போது, தி.மு.க அமைச்சர்களும் கூட்டணிக் கட்சி தலைவர்களும் உச்சஸ்தாயியில் முழங்கினார்கள். அதேசமயம், 'தி.மு.க கூட்டணியை மண் கவ்வ வைப்போம்' என்று அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளரான 'எடப்பாடி' பழனிசாமி உள்ளிட்டோர் முழங்கினார்கள். ஆனால், வாக்கு எண்ணிக்கையின் போக்கைப் பார்த்தால், தி.மு.க சொன்னதைச் செய்துவிடும் போலத்தான் தெரிகிறது.

நண்பகல் 12 மணி நிலவரப்படி தி.மு.க கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 39,855 வாக்குகளும், அ.தி.மு.க-வின் தென்னரசு 13,515 வாக்குகளும் வாங்கியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக சீமானின் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் 2,722 வாக்குகளும், விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடர் கழக வேட்பாளர் 220 வாக்குகளும் வாங்கியுள்ளனர். ஆகமொத்தம், இளங்கோவன் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 'பணநாயகம் வென்றிருக்கிறது' என்று சொல்லி, இதை அ.தி.மு.க வேட்பாளரும் இப்போதே உறுதிப்படுத்திவிட்டார். அதற்கடுத்தபடியாக 'டெபாசிட் வாங்கமுடியும்' என்கிற நம்பிக்கையை இப்போதைக்கு தக்க வைத்திருப்பவர் அ.தி.மு.க-வின் வேட்பாளரான தென்னரசு மட்டும்தான். மற்ற வேட்பாளர்கள் 75 பேருக்கும் டெபாசிட் காலி என்பதில் சந்தேகமே இல்லை.

சரி, டெபாசிட் தொகையை திரும்ப வாங்கவேண்டும் என்றால் ஒரு வேட்பாளர் எவ்வளவு ஓட்டுகள் வாங்கியிருக்க வேண்டும்?
தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர், வேட்புமனுவுடன் டெபாசிட் தொகை செலுத்தவேண்டும். தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்குகள் வாங்கியிருந்தால், இந்தத் தொகையை தேர்தல் ஆணையம் திரும்பக்கொடுத்துவிடும். குறிப்பிட்ட அளவு வாக்குகள் என்பது... தேர்தலின்போது பதிவான வாக்குகளில் (செல்லத்தக்க வாக்குகள் என்பது முக்கியம்) 6-ல் ஒரு பங்கு வாக்குகள்.


இப்போது ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வருவோம்,

இங்கே மொத்த வாக்குகள் 2,26,898. பதிவான வாக்குகள் 1, 70, 192. ஆறில் ஒரு பங்கு எனும்போது 28,365 வாக்குகள் பெறவேண்டும் (எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு என்பதால், செல்லாத வாக்குகள் என்கிற பேச்சே இருக்காது). எனவே, குறைந்தபட்சம் 28,365 வாக்குகள் பெற்றால்தான் டெபாசிட் திரும்பக் கிடைக்கும். இதுவரையில் சுமார் 60 ஆயிரம் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இப்போதைய வேகத்திலேயே சென்றால், அ.தி.மு.க-வுக்கு டெபாசிட் கிடைக்க வாய்ப்புகள் ஓரளவுக்கு இருக்கின்றது. ஆனால், தி.மு.க. கூட்டணி வேட்பாளர் கொஞ்சம்கொஞ்சமாக வேகம் எடுப்பாதல், டெபாசிட் பறிபோனாலும் சொல்வதற்கில்லை.

''இன்னும் 10 ரவுண்ட் இருக்கு.... எங்க ஏரியா வரட்டும். அப்ப பாத்துக்கலாம்'' என்று எதிர்க்கட்சி வேட்பாளர் 'அமைதிப்படை'யில் சொல்லும்போது, ''உங்க ஏரியாவுலதாண்டா மொத்தமா கள்ளவோட்டே போட்டோம்''என்று 'அமாவசை' என்கிற 'நாகராஜ சோழன் எம்.ஏ'-வின் எடுபிடி மணிவண்ணன் சொல்லும் டயாலாக்தான் நினைவுக்கு வருகிறது!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?