திருவாரூர் தெற்கு வீதியை கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்து, திருவாரூர் நகராட்சி கூட்டத்தில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக முன்னாள் திருவாரூர் மாவட்டத் தலைவர் ராகவன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மற்றும் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
சிலர் இந்தப் புகைப்படம் போலியானது. மார்ஃப்ட் புகைப்படம் இது என கருத்து தெரிவித்து வருகின்றனர்
உண்மை என்ன? இந்த புகைப்படம் போலியானதா?
Newssensetn தலம் இது குறித்த விரிவான விசாரணையில் இறங்கியது.
போலி புகைப்படங்களை ஆரய்வதற்கு என்றே பல தளங்கள் உள்ளன. அவற்றின் துணைக் கொண்டு ஆராய்ந்ததில் இந்தப் புகைப்படம் உண்மை என தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் மே 12 மாலை 6 மணிக்கு எடுக்கப்பட்டுள்ளது.
Fotoforensics தளம் இந்தப் புகைப்படம் குறித்த முழுமையான தகவல்களை வழங்குகிறது.
இது மட்டும் அல்லாமல், இந்த கூட்டத்திந் காணொளியே முழுமையாக வெளியாகி உள்ளது.
இதனையும் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் போது புகைப்படம் உண்மை என்றே தெரிகிறது.
இப்படியான சூழலில், இந்த கூட்டத்தை கூட்டியது பாஜகவின் புதுவரவான எஸ்ஜிஎம்.ரமேஷ் தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தனது சமூகத்தைச் சேர்ந்த தனது ஆதரவாளர்களை குடும்பம் குடும்பமாக ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார் எஸ்ஜிஎம் ரமேஷ்.
இதனால் அண்ணாமலை உள்பட பாஜக தலைமை மகிழ்ச்சியடைந்துள்ளது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதியில் தன்னை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என எஸ்ஜிஎம்.ரமேஷ் ஏற்கெனவே கூறிவிட்டாராம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp