Jeyakumar

 

Twitter

தமிழ்நாடு

சிறையிலிருந்து வெளியானார் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் - மாலை அணிவித்து வரவேற்ற அதிமுகவினர்

மாலை 6.30 மணி வரை அமைச்சர் ஜெயக்குமார் பிணை ஆணையை சிறை அதிகாரிகளிடம் வழங்காத காரணத்தால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று விடுதலை செய்யப்படவில்லை

Antony Ajay R

கடந்த 21ம் தேதி முதல் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இன்று வெளியானார்.

உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக பிரமுகரை தாக்கியது, அத்து மீறி சாலை மறியலில் ஈடுபட்டது ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாருக்கு இரு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்தது. ஆனால், தொடர்ந்து மூன்றாவதாக போடப்பட்ட சென்னை, துரைபாக்கத்தில் 8 கிரவுண்ட் நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் கிடைக்க தாமதமானதால் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று மூன்றாவது வழக்கிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதனால் நேற்றே ஜெயக்குமார் வெளியாவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அதிமுகவின் தொண்டர்கள் சிறை வாசல் முன்பு கூடி வந்த நிலையில் சிறைத்துறை விதிப்படி மாலை 6 மணிக்கு மேலாக கைதிகளை விடுவிக்க கூடாது என்ற விதி உள்ள நிலையில், மாலை 6.30 மணி வரை அமைச்சர் ஜெயக்குமார் பிணை ஆணையை சிறை அதிகாரிகளிடம் வழங்காத காரணத்தால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று விடுதலை செய்யப்படவில்லை. இதனால் 4 மணி நேரமாக முன்னாள் அமைச்சரை வரவேற்க காத்திருந்த அதிமுக தொண்டர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை ஏராளமான அதிமுக தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?