ராஜேந்திரபாலாஜி

 

Twitter

தமிழ்நாடு

20 நாட்கள், 8 தனிப்படையினர் கர்நாடகாவில் கைதுசெய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி

Antony Ajay R

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

மோசடி வழக்கில் காவல்துறையினர் கைது செய்யாமல் இருக்க ராஜேந்திர பாலாஜி தரப்பில் முன் ஜாமீன் மனு அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவைக் கடந்த 17-ம் தேதி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்யத் தீவிரமாகக் களமிறங்கினர்.

ராஜேந்திரபாலாஜி

8 தனிப்படைகள்

முன்னாள் அமைச்சரைப் பிடிக்க விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பின்னர் 8 தனிப்படைகளாக அவை நீட்டிக்கப்பட்டன. தமிழகம் மட்டுமின்றி ராஜேந்திர பாலாஜி மறைந்துள்ளதாகக் கூறப்படும் பெங்களூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் தீவிரமாகத் தேடி வந்தனர். ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள், நெருக்கமானவர்கள், அடிக்கடி தொடர்பிலிருந்தவர்கள் உட்பட சுமார் 600 பேரின் கைப்பேசி எண்களை சைபர் க்ரைம் காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார் ராஜேந்திர பாலாஜி.

கிட்ட தட்ட 20 நாட்கள் ஆட்டம் காட்டிய இப்போது கர்நாடகாவில் தனிப்படை போலிசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது ஜாமீன் குறித்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?