அம்பேத்கர் நினைவு தினமான இன்று அனைத்து அரசியல் கட்சியினரும், தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அம்பேத்கரின் சாதனைகளை இணையவாசிகள் நினைவுகூறவே காலை முதல் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது #Jaibhim.
இதற்கு மத்தியில் அம்பேத்கர் படத்துக்கு காவி உடை அணிவித்து, விபூதி பூசியும், குங்குமம் வைத்தும் கும்பகோணம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்து மக்கள் கட்சி மாநில செயலாளரான டி.குருமூர்த்தி என்பவர் இதனைச் செய்ததாக தெரியவந்துள்ளது.
இந்த போஸ்டரால் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் மாற்று உடையில் போஸ்டர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போஸ்டர்களை ஒட்டிய குருமூர்த்தி, “அம்பேத்கர் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பொதுவானவர்.
அவரை ஒரு சமூகத்தின் கீழ் கொண்டு வருவது ஏற்புடையதாக இல்லை. அவர் பௌத்த சமயத்தை தழுவி இருந்தார். அந்த மதம், இந்து மதத்தை சார்ந்ததாகும்.
அந்த பௌத்த மதத்தின் நிறமும் காவி ஆகும். அவரை ஒரு சமூகத்தினர் சாதிய ரீதியாக கொண்டு சொல்வதை தடுக்கும் வகையிலும், அம்பேத்கர் இந்து மதத்தை சார்ந்த பௌத்த மதத்தை சேர்ந்தவர் என உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் இதேபோன்று அவருக்கு போஸ்டர்கள் ஒட்டப்படும்” என்று கூறியிருப்பதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டர்களை கண்டித்து ட்விட்டரில் பதிவு வெளியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "சனாதன சங்கத்துவ வர்ணாஸ்ரம பாகுபாடுகளை- பார்ப்பனீய மனுஸ்மிருதி மேலாதிக்கத்தை- தன் இறுதிமூச்சு வரையில் மூர்க்கமாக எதிர்த்து 10 இலட்சம் பேருடன் இந்து மதத்திலிருந்து வெளியேறி மதவெறியர்களின் பல்லைப் பிடுங்கிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தும் மதவாத மனநோயாளிகளை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சிவன், விஷ்ணு, பிரம்மா முதலிய கடவுள்களை வணங்கமாட்டேன் என உறுதிமொழியேற்ற புரட்சியாளர் அம்பேத்கருக்கு பட்டை- குங்குமமிட்டு காவி உடைபோட்டு அவரை அவமதித்துள்ள மதவாதப் பித்தர்களைக் கைதுசெய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்." எனப் பதிவிட்டிருந்தார்.
புரட்சியாளர் அம்பேத்கரின் புகைப்படங்களை அவமதித்ததாக குருமூர்த்தி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர் கும்பகோணம் காவல்துறையினர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust