Rajendra Cholan Vikatan
தமிழ்நாடு

வருகிறார் சோழர்: உலக நாகரிகத்தில் சோழர்களின் பங்களிப்பு - சோழர் வரலாறு மினி தொடர் 2

Govind

இந்திய துணைக் கண்டத்திற்கு வெளியே சென்று படையெடுப்பு நடத்தி நிலப்பரப்பைக் கைப்பற்றிய ஒரே இந்திய மன்னன் ராஜேந்திர சோழன் மட்டும்தான். அவர் மலாய் தீபகற்பம் மற்றும் இந்தோனீசியாவிற்கு ஒரு கடற்படையை அனுப்பி வைத்தார். தென்கிழக்கு ஆசியாவுடனான வர்த்தகம் மற்றும் கலாச்சார தொடர்புகளை நிறுவுவதே சோழப் படையின் முக்கியமான இலக்காக இருந்தது. சோழர்களின் கலை செல்வாக்கு தென்கிழக்கு ஆசிய கலாச்சாரங்களில் முத்திரையைப் பதித்தது.


தென் கிழக்கு ஆசியாவில் சோழர்களின் கலை செல்வாக்கு

9 முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை சியாம் தீபகற்பத்தில் (இன்றைய தாய்லாந்து) பிராமணிய சிற்பங்கள் சோழர் கலையின் செல்வாக்கால் உருவாக்கப்பட்டன. அவற்றில் தகுபாவில் உள்ள பிரணராய் மலையில் உள்ள கல் சிற்பங்கள் முக்கியமானவை. பர்மாவிற்கும் சுமத்ராவிற்கும் இடையில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. கிரந்தம் என்பது தமிழ் மற்றும் சமஸ்கிருதம் இரண்டிற்கும் உள்ள பொதுவான எழுத்து முறையாகும். இந்த கல்வெட்டுகள் அனைத்தும் 11 மற்றும் 12ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சேர்ந்தவையாகும்.

காரைக்கால் அம்மையார்

தென்கிழக்கு ஆசியாவில் சோழர்களின் கலை செல்வாக்கால் உருவாக்கப்பட்ட சிற்பங்களில் தமிழக பெண் துறவியான காரைக்கால் அம்மையார் சிற்பம், கம்போடியாவில் உள்ள கெமர் பாண்டே ஸ்ரீ கோவிலில் சங்கு வாசிக்கும் சிற்பம் மற்றும் பாங்காக் அருங்காட்சியகத்தில் உள்ள தாய்லாந்து மற்றும் சோழர்களின் கலையால் உருவாக்கப்பட்ட நடராஜரின் வெண்கல சிற்பம் ஆகியவை அடங்கும்.

கலை மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியாவில் பேசப்படும் பெரும்பான்மையான மொழிகளிலும், சமூகத்திலும் சோழர்களின் செல்வாக்கு காணப்படுகிறது. கம்போடியா மற்றும் தாய்லாந்தில் உள்ள மன்னர்களை பிராமணியக் கடவுள்களின் அவதாரங்களாக மக்கள் கருதுவது சோழர்களின் மிகத் தெளிவான முத்திரையாகும்.

ராஜேந்திர சோழனின் மகனான வீரராஜேந்திர சோழனின் மரணத்திற்குப் பிறகு இடைக்கால சோழப் பேரரசு கிபி 1070ஆம் ஆண்டு முதல் வீழ்ச்சியடையத் துவங்கியது. சோழர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையிலான கூட்டணியின் விளைவாக வந்த இக்கால சோழர்கள் பிற்கால சோழர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களது காலத்தில் குழப்பமான நிலையே இருந்தது.

பிரகதீஸ்வரர் கோபுரம்

சோழர்கள் விட்டுச் சென்ற அற்புதமான கலை மற்றும் கட்டிடக் கலை

சோழர்கள் பெற்ற வெற்றி, ஈட்டிய செல்வத்தின் முக்கியத்துவம் அவர்கள் விட்டுச் சென்ற அற்புதமான கலை மற்றும் கட்டிடக் கலையில் இருக்கிறது. தஞ்சாவூரில் உள்ள பிரம்மாண்டமான பிரகதீஸ்வரர் கோவில் சோழர்களின் கலைத் திறமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இக்கோவிலில் சராசரி சோழர் கால கோவில்களை விட 40 மடங்கு அதிகமான கற்கள் இருக்கின்றன. இவ்வளவு பெரிய கோவிலைக் கட்டுவதற்கு ராஜராஜ சோழன் எவ்வளவு பெரிய வளங்களைத் திரட்டியிருப்பார் என்பதை யூகிக்க முடிகிறது. சோழர்களின் அரசியல் வெற்றி இல்லாமல், பல போர்களில் அவர்கள் ஈட்டிய செல்வங்கள் இல்லாமல் இந்தக் கோவிலை கட்டியிருக்கவே முடியாது.


10ஆம் நூற்றாண்டிலிருந்து சோழர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்பு கோவில்களை உருவாக்கத் துவங்கினர். சாளுக்கியர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட கோவில்களில், கோவில்களின் அடிப்படை வடிவமைப்பை காணலாம். பல்லவர்கள் காலத்தில் குடைவரைக் கோவில் எனும் பாணி வெளிப்பட்டது. அதாவது ஒரு பாறையைக் குடைந்து சிற்பங்களோ, சிறு கோவில்களோ கட்டுவது. ஆனால் சோழர்களின் கட்டமைப்பு கோவில்கள் என்பது மேற்கண்ட இரு வகைகளை விட பிரம்மாண்டமான வளர்ச்சியாகும்.

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பிரகதீஸ்வர் கோவிலின் பிரதான கோபுர விமானம், ஒரு பிரமிடு வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. 66 மீட்டர் உயரமுள்ள இக்கோபுரம் பழங்காலத்தில் கட்டப்பட்ட மிக உயரமான கட்டிடங்களின் ஒன்றாகும். சதுரமான கற்கள் கோபுரத்தின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டு இந்த பிரமீடு வகை கோபுரம் எழுப்பப்பட்டிருக்கிறது. கோபுரத்தின் உச்சியில் கோபுரத்தை தாங்கிப் பிடிக்கும் வண்ணம் 80 டன் அடங்கிய ஒரு பாறை உருண்டை வடிவத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் எடையில் கோபுரம் நிற்கிறது. இன்றைக்கும் இந்தக் கோவிலின் கட்டுமானத்தை பார்த்து நவீன பொறியியலாளர்கள் வியந்து போகிறார்கள்.

ராஜேந்திர சோழர் காலத்தில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோவில் அதன் கேடனரி வடிவ விமானத்துடன் உள்ளது. இது ஒரு தனித்துவமான கட்டுமான பொறியியல் அதிசயமாகும்.

கலையில் அரசக் குலப் பெண்களின் பங்களிப்பு

சோழர் கால கலைகளில் அரச குடும்பத்து பெண்களும் நடனக்கலைஞர்களும் பங்களிப்பு செய்திருப்பதை பல கல்வெட்டுகள் கூறுகின்றன.

சுந்தராதித்த சோழனின் விதவை அரசியான செம்பியன் மாதேவி மிகவும் பிரபலமான புரவலர்களில் ஒருவராவார். கோனேரிராஜபுரத்தில் உள்ள உமாமகேஸ்வரர் கோவில், ஆடுதுறையில் உள்ள திருக்குரங்கடுதுறை கோவில், திருக்கொடிக்காவலில் உள்ள திருக்ககோடிஸ்வரர் கோவில் போன்றவற்றுக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக செம்பியன் மாதேவி நன்கு அறியப்பட்டவர். மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் நாகப்பட்டினம் அருகே செம்பியன் மகாதேவி என்ற கிராமத்தையும் அவர் நிறுவினார்.

சோழர்கள் தங்கள் கட்டிடக் கலையில் விட்டுச் சென்ற பெரிய அளவிலான கல்வெட்டுகள் அவர்களின் ஆட்சியைப் பற்றிய விரிவான வரலாற்றை அறிந்து கொள்வதற்குப் பயன்படுகின்றன. கோவிலின் சுவர்கள், அவற்றின் தூண்கள் மற்றும் பீடங்கள் அனைத்தும் கல்வெட்டுகளால் நிறைந்திருக்கின்றன. சில கல்வெட்டுகள் கோவில்களுக்குப் பயன்படாத பாறைகளில் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒரு ஆலயத்தை புனரமைப்பதற்காக அவற்றின் கட்டுமானத்தை அகற்றுவதற்கு முன்பு கோவில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகள் நகலெடுக்கப்பட்டு, கோவில் புதிதாக கட்டப்படும் போது அவற்றில் மீண்டும் பொறிக்கப்படுகின்றன.

செம்பியன் மாதேவி வெண்கல சிலை

Temple art under the Chola queens நூலை எழுதிய பாலசுப்ரமணியம் வெங்கட்ராமன், செம்பியன் மகாதேவியின் முக்கியமான பங்களிப்புகளை குறிப்பிடுகிறார். அவற்றில் அவரது காலத்தில் உருவாக்கப்பட்ட வெண்கல அணிகலன்கள் முக்கியமானவை. மகாதேவி ஒரு உலோக வார்ப்பு பாரம்பரியத்தையே அமைத்தார். அவரது பேரனாகிய முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் இத்தகைய உலோக அணிகலன்கள் அணிவது பெருமைக்குரிய விசயமாக மாறியது. ராஜராஜன் காலத்தில் பொற்கொல்லர் கூடங்களிலிருந்து தரமான, பிரம்மாண்டமான வெண்கலப் படைப்புகள் வெளிவந்தன. செம்பியன் மகாதேவியின் ஆட்சியில்தான் கோவல்களில் வெண்கலம் மற்றும் கல்லால் ஆன நடராஜர் சிலைகள் சிறப்பாகக் காட்சியளித்தன.

மகாதேவிக்கு பிறகு கலைகளுக்கு பங்களிப்பு செய்தவர்களில் முதலாம் ராஜராஜ சோழனின் சகோதரியான குந்தவை, மனைவியும் அரசியுமான லோக மகாதேவியும் முக்கியமானவர்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?