குற்றால அருவியில குளிச்சது போல இருக்குதா! 'தென்னகத்தின் ஸ்பா' Coutrallam பற்றி தெரியுமா? twitter
தமிழ்நாடு

குற்றால அருவியில குளிச்சது போல இருக்குதா! 'தென்னகத்தின் ஸ்பா' Coutrallam பற்றி தெரியுமா?

இந்த குற்றாலம் பகுதியை தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்க முக்கிய காரணம், இதன் தண்ணீரில் மருத்துவ குணங்கள் உள்ளன. ஆயுர்வேத குணங்கள் அடங்கிய மரங்கள் தாவரங்களில் இருந்து தண்ணீர் இந்த ஆற்றலை பெறுகின்றன. நாள்பட்ட வலிகளை இந்த தண்ணீர் குணப்படுத்துவதாக நம்புகின்றனர்.

Keerthanaa R

தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களில் ஒன்றான தென்காசியில் அமைந்திருக்கிறது குற்றாலம் அருவிகள். இங்கு மொத்தம் 9 முக்கிய அருவிகள் உள்ளன. தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது குற்றாலம்.

இதனை தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கின்றனர்.

இந்த குற்றாலம் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக தெரிந்துகொள்ளலாம்!

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் இருக்கிறது குற்றாலம் அருவிகள். சரியாக சொல்லவேண்டும் என்றால், அகஸ்திய மலைகளில் இருந்து ஊற்றாக பெருக்கெடுக்கிறது.

கடல்மட்டத்தில் இருந்து சுமார் 160 மீ அல்லது 520 அடி உயரத்தில் இருக்கின்றன. இந்த பகுதியில் நூற்றாண்டுகள் பழமையான கோவில்கள் அமைந்துள்ளதை நாம் பார்க்கலாம். அதே சமயத்தில், தாமிரபரணி, மணிமுத்தாறு, பச்சையாறு, சித்தாறு போன்ற பருவகால ஆறுகள் இங்கிருந்து தான் உருவாகின்றன.

இந்த குற்றாலம் பகுதியை தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்க முக்கிய காரணம், இதன் தண்ணீரில் மருத்துவ குணங்கள் உள்ளன. ஆயுர்வேத குணங்கள் அடங்கிய மரங்கள் தாவரங்களில் இருந்து தண்ணீர் இந்த ஆற்றலை பெறுகின்றன. நாள்பட்ட வலிகளை இந்த தண்ணீர் குணப்படுத்துவதாக நம்புகின்றனர்.

இதனாலேயே குற்றாலம் பகுதிகளில் ஹெல்த் ரிசார்ட்டுகளை அதிகமாக நாம் காணலாம்.

இங்கு ஆண்டுதோறும் அருவிகள் பாய்வதில்லை. அந்த பகுதியில் ஏற்படும் மழைப்பொழிவை பொறுத்தது நீரூற்றின் அளவு. ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை குற்றாலம் சென்று வர சிறந்த நேரமாக இருக்கும். ஏனென்றால் இந்த சமயத்தில் தான் அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

இந்த குற்றால அருவிகளில் மக்கள் குளிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனாலும், அதிகபடியான மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுக்கும்போது தடைகள் விதிக்கப்படுகிறது.

குற்றால குறவஞ்சி என்ற தமிழ் இலக்கியத்தில், கவிஞர் திருகுடராசப்ப கவிராயர், இந்த நகரத்தினை போற்றியும், குற்றாலநாதரின் மீதும் கவிகள் எழுதியுள்ளார்.

மேலும் சங்ககாலத்தில் இந்த குற்றாலம் நகரத்தை தேனூர் என்று குறிப்பிடுகின்றனர். சங்க இலக்கியத்தில், பெண்ணின் அழகை இந்த அருவியின் அழகோடு ஒப்பிடும்படி கவிகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றால அருவிகள் குறித்த சில கதைகளும் உள்ளன. அவற்றில் ஒன்று, சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமணத்தைக் காண, மற்ற அனைத்து தெய்வங்களும் இமயமலையில் குவிந்தனர். இது பூமியை சற்றே சாயவைத்தது.

ஆகையால் சிவபெருமான், பூமியின் சமநிலையை மீட்டெடுக்க தெற்கு நோக்கிச் செல்லும்படி அகஸ்திய முனிவருக்கு உத்தரவிட்டார். மேலும், சிவபெருமானின் திருக்கல்யாணத்தை காண அகஸ்திய முனிவருக்கு சிவபெருமானால் தெய்வீக பார்வையும் வழங்கப்பட்டது.

உடனே தெற்கு நோக்கி புறப்பட்ட அகஸ்திய முனிவர், சேதம் ஏற்படாமல் தடுத்தார், அவரது பெயரில் மலைகள் உருவாகின. இங்குள்ள கோவிலில் குற்றாலநாதர் உருவத்தை அகஸ்திய முனிவர் விஷ்ணுவின் உருவத்தை மனதில் நினைத்து உருவாக்கியதாகவும் கதைகள் கூறுகின்றன.

இதனாலேயே குற்றாலம் என்ற பெயரும் வந்தது.

மற்றொரு கூற்றின்படி, இந்த பகுதியில் உள்ள காடுகளில் இருந்த ஆலமரங்கள் குள்ளமாக இருந்தன. குறு ஆள் என்று அதனை குறிப்பிட்டனர். அந்த பெயரே மருவி குற்றாலம் ஆனது.

சோழ, பாண்டிய மன்னர்கள் இந்த பகுதியை ஆண்டதற்கான சான்றுகள் இங்குள்ள கோவில்களின் கல்வெட்டுகளில் உள்ளன.

இந்த குற்றால அருவிகள் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தான் தென்காசி ரயில் நிலையம் உள்ளது. மேலும், தூத்துகுடி விமான நிலையம் 90 கிமீ தொலைவில் இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?