நம் வீட்டில் எவ்வளவு தங்கம், பணம் வைத்திருக்கலாம்? தங்கத்துக்கு வரி கட்டவேண்டுமா? Twitter
தமிழ்நாடு

நம் வீட்டில் எவ்வளவு தங்கம், பணம் வைத்திருக்கலாம்? தங்கத்துக்கு வரி கட்டவேண்டுமா?

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி ஒரு குடும்பத்தினர் தங்கம் வைத்திருந்தால் அது வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்படும்.

Antony Ajay R

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தங்கம் செல்வத்தின் அடையாளமாக பார்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் தங்கம் வைத்திருப்பர்து மரியாதை பெற்று தரும் ஒன்றாக மக்கள் கருதுகின்றனர்.

கடந்த ஆண்டில் மட்டுமே இந்தியா 31.25 டன் தங்கத்தை வாங்கியிருக்கிறது. நாம் தங்கத்தை பாதுகாப்பாக வைப்பது அவசியம். ஆனால் நாம் ஒரு அளவுக்கு மேல் தங்கத்தை வீட்டில் வைத்திருக்க முடியாது.

தங்கம் வைத்திருப்பது குறித்து அரசாங்க விதிகள் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கலாம்.

வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, "திருமணமான பெண்கள் வீட்டில் 62.5 சவரன் (500கிராம்) வரை வீட்டில் நகை வைத்திருக்கலாம்.”

திருமணம் ஆகாத பெண்கள் 31.25 சாவரன் வரை நகை வைத்திருக்கலாம். ஆண்கள் 12.5 சவரன் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள்"

மேலே குறிப்பிட்டுள்ள அளவைத் தாண்டி ஒரு குடும்பத்தினர் தங்கம் வைத்திருந்தால் அது வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்படும்.

குடும்ப பழக்கவழக்கங்கள் பாரம்பரியம் போன்ற காரணங்களால் அதிக தங்கம் வைத்திருந்தால் அவற்றை பறிமுதல் செய்வதும் செய்யாமல் இருப்பதும் வருமானவரித்துறை அலுவலர் எடுக்கும் முடிவே ஆகும்.

தங்கத்துக்கு எப்போது வரி செலுத்த வேண்டும்?

தங்கம் வாங்கிய 3 ஆண்டுகளில் அதனை விற்றால் குறுகியகால மூலதன ஆதாய வரி கட்டவேண்டும். 3 ஆண்டுகளுக்கு பிறகுவிற்றால் நீண்டகால மூலதன ஆதாய வரி கட்டவேண்டும்.

முதலீட்டு ஆதாய வரி தங்கத்தின் விலையில் இருக்கும் மாறுபாட்டில் 20 சவீதம் எனக் கூறப்படுகிறது. தவிர செஸ் வரியும் கட்டவேண்டும்.

வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?

வீட்டில் இவ்வளவு தான் பணம் வைத்திருக்க வேண்டும் என எந்த விதியும் கிடையாது. ஆனால் வைத்திருக்கும் பணத்துக்கு முறையாக கணக்கு இருக்க வேண்டும்.

முறையான கணக்கு இல்லாமல் இருந்தால், 137 விழுக்காடு அதிகமாக அபராதம் செலுத்த வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?