கிருத்திகா உதயநிதி Twitter
தமிழ்நாடு

காதலிப்பதை வெளிப்படுத்த பயம் எதற்கு? - கிருத்திகா உதயநிதி ட்வீட்

உதயநிதியின் மகனான இன்ப நிதி அவரின் தோழியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் படுவைரலாக பகிரப்பட்டதையடுத்து கிருத்திகா உதயநிதி பதிலடி கொடித்துள்ளார்.

Priyadharshini R

உதயநிதி ஸ்டாலின் - கிருத்திகா உதயநிதி ஆகியோருக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. காதல் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு இன்பநிதி, தன்மயா ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முதல் இன்பநிதி தனது தோழியின் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். உதயநிதி அமைச்சர் ஆனதில் இருந்தே அவரது மகன் இன்பநிதியும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் இன்பநிதி தனது தோழியுடன் இருக்கும் சில புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு பல்வேறு தரப்பினர் தங்களின் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

ஆனால் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக கிருத்திகா உதயநிதி ட்விட்டரில் காதல் குறித்து பதிவிட்டிருந்தார்.

அதில், "காதலிப்பதற்கும், காதலை வெளிப்படுத்துவதற்கும் பயம் வேண்டாம். இயற்கையின் அழகை புரிந்துக்கொள்ள இதுவும் ஒரு வழி என்று தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.இந்த பதிவு இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம், இந்த விவகாரத்தில் இன்பநிதிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து இருக்கிறார்.

அதில் ‘தற்போது அண்ணாமலை டீம் உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை கசியவிட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்துகிறது.

பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் அண்ணாமலை தலைமையில்? அடல்ட் வீடியோ ஆடியோ போட்டோ புகழ் அண்ணாமலை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?