Irfan View NewsSense
தமிழ்நாடு

இர்ஃபான்ஸ் வியூ சேனலை நீக்கிய யூ டியூப்! - இதுதான் காரணம்! ஷாக்கிங் அப்டேட் #irfansview

இர்ஃபான் வியூ எனும் ஃபுட் ரிவ்யூ யூடியூப் சேனலை நடத்தி வரும் இர்ஃபான் வித விதமான உணவுகளை ரசித்து சாப்பிட்டு, அதுகுறித்து ஃபுட் ரிவ்யூ கூறுவார்.

NewsSense Editorial Team

பிரபல யூ டியூப் பதிவர் இர்பானின் Irfan's View Youtube சேனல், யூடியூப் தளத்தில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது .

இர்ஃபான் வியூ எனும் ஃபுட் ரிவ்யூ யூடியூப் சேனலை நடத்தி வரும் இர்ஃபான் வித விதமான உணவுகளை ரசித்து சாப்பிட்டு, அதுகுறித்து ஃபுட் ரிவ்யூ கூறுவார். ஆரம்பத்தில் சாதாரண கடைகளில் சாப்பிட்டு ரிவியூ கூறி வந்தவர், அதன் பிறகு டிரெண்ட் ஆனதும், அதனையே தொழில் ஆக மாற்றினார். சில நேரங்களில் நல்ல ஹோட்டல்களை பற்றியும் பல நேரங்களில் பேமண்ட் கொடுத்த ஹோட்டல்கள் பற்றியும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். சொகுசு கார், வீடு என யூ டியூப் வருமானத்தில் ஓஹோ என வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் இர்ஃபான். தற்போது அவரின் கொண்டாட்டத்தில் இடி விழுந்த மாதிரி சேனலை நீக்கி சீல் வைத்துவிட்டது யூ டியூப்.

இதுகுறித்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்ட இர்ஃபான், ``Community guidelines -ஐ மீறியதாக என் யூ டியூப் மீது ஸ்டிரைக் கொடுத்து சேனலை நீக்கி உள்ளது யூ டியூப்’’ என்று பதிவிட்டுள்ளார்.

இர்ஃபானின் யூ டியூப் சேனல் நீக்கப்பட்டது குறித்து பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் பலர் அவர் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்பதால் , அவருக்கு நேர்ந்தது சரியே என்று விமர்சித்துள்ளனர். இந்த சம்பவத்தால் யூ டியூபை நம்பி பிழைக்கும் பலரும் ஆட்டம் கண்டுள்ளனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?