Lovedale: ஊட்டியில் மறைந்திருக்கும் இந்த சிறிய நகரம் பற்றி தெரியுமா? Twitter
தமிழ்நாடு

Lovedale: ஊட்டியில் மறைந்திருக்கும் இந்த சிறிய நகரம் - குடும்பத்துடன் ட்ரிப் செல்ல தயாரா?

சுற்றுலாவுக்கு புதிய இடங்களை தேடித் தேடி செல்பவர்கள் மத்தியில் நன்றாகவே பிரபலமாக இருக்கும் இவ்விடத்தில், பச்சை பசேல் என்ற மரங்களும், தேயிலை தோட்டங்களும், வளைந்து நெளிந்து போகும் மலைகளும் உள்ளன.

Keerthanaa R

மழைக்காலமோ வெயிலோ, கோவை வாசிகள் போர் அடித்தால் கூட சென்று வரும் இடம் ஊட்டி.

இங்கு மலை ரயில், சம்மரில் ஃப்ளவர் ஷோ, பொட்டானிக்கல் காரட்ன், குன்னூர், அவலாஞ்சி, தொட்டபெட்டா மலை என சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. நம் வீக்கெண்ட்டை தரமானதாக மாற்ற ஊட்டி சிறந்த இடம்.

மேலே குறிப்பிட்டுள்ள இடங்கள் எல்லாம் நாம் வழக்கமாக செல்லும் ஸ்பாட்ஸ் தான். நம்மிடன் சஜெஷன் கேட்டாலும் நாம் இந்த இடங்களை தான் சொல்லுவோம்.

ஆனால் மலைகளின் அரசியான ஊட்டியில், மக்கள் யாரும் அதிகம் சென்றிடாத ஒரு ஹிட்டன் ஸ்பாட் இருக்கிறது. ஊட்டியிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது லவ்டேல் தான் அந்த இடம்.

சுற்றுலாவுக்கு புதிய இடங்களை தேடித் தேடி செல்பவர்கள் மத்தியில் பிரபலமாகவே இருக்கும் இவ்விடத்தில், பச்சை பசேல் என்ற மரங்களும், தேயிலை தோட்டங்களும், வளைந்து நெளிந்து போகும் சாலைகளும் உள்ளன.

இந்த இடத்துக்கு நாம் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊட்டி மலை ரயில் மூலமாகவே சென்றடையலாம். மலை ரயில் ஸ்டாப்பிங்குகளில் லவ்டேலும் ஒரு ஸ்டாப்.

1812ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கண்டறியப்பட்டது லவ்டேல். இங்கு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கட்டிய குடியிருப்புகள், பங்களாக்கள், பள்ளிகள், தேவாலயங்கள் இருக்கின்றன. குறிப்பாக லவ்டேலில் அமைந்திருக்கும் லாரன்ஸ் பள்ளியில் 116 ஆண்டு பழமையான தேவாலயம் ஒன்று இருக்கிறது. காத்திக் ஸ்டைல் கட்டிடக்கலையில் கட்டப்பட்டிருக்கும் இந்த சர்ச் ஒரு அழகிய கலைப்படைப்பாகும்.

இங்கு மலையேற்றம் செய்யலாம், நீர் வீழ்ச்சிகளில் குளிக்கலாம், தேயிலைத் தோட்டங்களை ரசிக்கலாம். அரசு மலர்தோட்டம், லவ்டேல் சர்ச், லவ்டேல் நீர்வீழ்ச்சி, முருகன் கோவில், உப்பர் பவானி ஏரி ஆகிய இடங்களை இங்கு நிச்சயம் காண வேண்டும்.

ஊட்டியை போல அதிக மக்கள் கூட்டம் இங்கு இருக்காது என்பதனால், அன்றாட இரைச்சலில் இருந்து லவ்டேல் நம்மை தப்பிக்க வைக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?