மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் உயிரிழப்பு! ட்விட்டர்
தமிழ்நாடு

பாலமேடு ஜல்லிக்கட்டு : 9 மாடுகளை அடக்கிய வீரர் உயிரிழப்பு - என்ன நடந்தது?

Keerthanaa R

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி உயிருக்கு போராடி வந்த அரவிந்த் ராஜ் என்ற மாடுபிடி வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாட்டுப் பொங்கல் தினமான இன்று, பாலமேட்டில் கோலகலமாக தொடங்கியது ஜல்லிக்கட்டு. போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடக்கிவைத்தார். இன்றைய போட்டியில், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் ஆயிரக்கணக்காண காளைகளையும் களமிறங்குகின்றன.

நான்கு சுற்றுகள் முடிவடைந்திருந்த போது, 9 காளைகளை அடக்கி, மூன்றாவது இடத்தில் இருந்தார் அரவிந்த் ராஜ் என்ற இளைஞர்.

அடுத்த சுற்றுக்காக வாடிவாசல் அருகிலேயே முதல் ஆளாக காத்திருந்தார் அரவிந்த். அப்போது சீறிப்பய்ந்த மாடு இவரை தாக்கி, வயிற்றைக் குத்தி கிழித்தது. தடுமாறி கீழே விழுந்த அரவிந்தை, அங்கிருந்த மருத்துவ உதவிக்குழு உடனடியாக மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர்.

வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அரவிந்த் ராஜ் உயிரிழந்தார். அரவிந்தை தவிர இன்னும் 4 வீரர்களும் சிகிச்சைக்காக ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இதுவரை 400க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது ஜல்லிக்கட்டுப் போட்டிகள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?